(பி.ஜெயின் ஆய்விற்கு ஆதாரபூர்வமான மறுப்பு 2000ஆம் ஆண்டு ஜமாஅதுல் முஸ்லிமீனின் வெளியீடாகிய அத்தீனுல் இஸ்லாம் எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது)
- பிரிவினையின் விளைவு!
- இஸ்லாமும் தலைமைத்துவமும்
- முஸ்லிம்களின் வழிகாட்டியார்?
- ஆட்சியதிகாரம் அற்ற அரசியல் தலைமைத்துவம்!
ஆசிரியரிடமிருந்து.......................!
- பிரிவினையின் விளைவு!
எவர்கள் தங்கள் மார்க்கத்தை(த் தங்கள் இஷ்டப்படி பலவாராக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு யாதொரு சம்மந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவர்கள் செய்து கொன்டிருந்த(இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்
(6:159)
இஸ்லாத்தை விளங்கிக் கொள்வது மிகவும் இலகுவானது ஏனெனில் கருனையாளனான அல்லாஹ் அப்படித்தான் தனது தீனை எற்படுதியுள்ளான். எனவே இஸ்லாத்தை வெளிப்படையாக மறுப்பதுடன் அதிலிருந்து மக்களைத் தூரமாக்க முயற்சிப்போரது வளையிலிருந்து அல்லாஹ்வின் அருளின் காரணமாக மக்கள் இலகுவாக தப்பிக்கொள்ள முடியம். ஆனால் இஸ்லாம் எனும் பெயரில் மக்களை வழிகெடுக்கும் தலைவர்களை புரிந்து கொள்வதுதான் பாமர மக்களுக்கு மிகவும் சிரமமானதாகக் காணப்படுகின்றது. இத்தலைவர்கள் தத்தமக்கென தனித்தனி பிரிவுகளை உண்டுபன்னி அது இஸ்லாம் எனக்கூறி மக்களை அப்பிரிவின்பால் அழைக்கின்றனர். ஆனால் அப்பிரிவுகளது ஒவ்வொரு அழைப்பும் நரகிற்கான அழைப்பு என்பதில் அணுவளவும் சந்தேகம் கிடையாது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூட தங்களது உம்மத்தில் பிரிவுகள் தோன்றும்போது வாழக்கூடிய முஸ்லிம்களை இத்தகைய பிரிவுகளனைத்தையும் விட்டும் முற்றிலும் ஒதுங்கி இருக்கும்படி எச்சரிக்கை செய்துள்ளார்கள். எவ்வளவுதான் சிரமங்கள் ஏற்பட்டாலும்கூட இஸலாத்தின் பெயரிலே இருக்கக்கூடிய பிரிவுகளுடன் ஒருபோதும் சேரக்கூடாது எனத்தடை செய்துள்ளார்கள். இத்தகைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவுடன் சேர்ந்துவிட்டால் அந்த ஒரோ தவறு எம்மை நரகில் ஆழ்திவிடும் என்பதே இவ்வாறு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் தடைசெய்வதற்கான காரணம் என்பதை அவர்களது ஹதீஸ் கூறிக்கொன்டிருக்கிறது. இஸ்லாம் எனும் பெயரில் மக்களை வழிகெடுக்ககூடிய பிரிவுகளில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிள் தங்களை தவ்ஹீத்வாதிகள் எனக்கூறிக் கொள்ளக்கூடிய பிரிவினரில் அதிகமானோர் அறிஞராக கருதக்கூடிய இந்தியாவை சேரந்;த பி.nஐய்னுல் ஆபிதீன் என்பவர் (இவர் பி nஐ எனும் சுருக்கப் பெயரிலே அறிமுகமானவர் என்பதால் அவ்வாறே நாமும் குறிப்பிடுகிறோம்) இஸ்லாத்திலிருந்து பிரிக்க முடியாத தலைமைத்துவம் சம்பந்தமாக 1999-மார்ச் மாதத்திற்கான அல்முபீன் மாத இதழில் அமீருக்கு கட்டுப்படுதல் ஒர் ஆய்வு எனும் தலைப்பில் ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளார.; ஐ.எ.சி இன் வெளியீடான அல்முபீன் எனும் மாத இதழ் எம்.ஸம்ஸூல்ளுஹா ரஹ்மானி அவர்களை ஆசிரியராக கொன்டு வெளி வந்தாலும் மேலே குறிபிடப்பட்டுள்ள ஆய்வு அல்முபீன் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முதல் இடம் பிடித்துள்ள பி.Nஐ இன் கருத்தேயாகும். எனவே பி.nஐ உடைய இந்த ஆய்வு இஸ்லாத்துடன் எவ்வறு முரன்படுகிறது? என்பதை விபரமாக தெளிவுபடுத்துமாறு பலர் எம்மிடம் வேன்டிக் கொன்டனர். அது அவசியமானதே என நாமும் கருதியதால் பி.nஐ இந்த ஆய்வில் கையான்டுள்ள தந்நிரங்கள் இருட்டடிப்புக்கள் போன்;றவற்றோடு அவரது அறியாமை வழிகேடு என்பவற்றைச் சுட்டிக்காட்டி அவர் முன்வைத்துள்ள கேள்விகளுக்கும் தெளிவான பதில்களைத் தந்திருக்கின்றோம்.
பி.nஐ இன் ஆய்விற்கான தெளிவான இந்த மறுப்புரையை படித்ததன் பிறகும் எவருக்கேனும் சந்தேகங்கள் இருந்து உங்கள் சந்தேகங்களைத் தெளிவாக எமக்கு எழுதி மேலதிக விளக்கங்களை பெற நீங்கள் விரும்பினால் அதற்கான விளக்கங்களைத் தருவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம். (இன்ஷா அல்லாஹ்)
ஐமாஅதுல் முஸ்லீமீனால் குர்ஆனைனையும் ஹதீஸையும் மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு முன்வைக்கப்படும் தூயஇஸ்லாத்திற்கு முரணாக எவரேனும் கருத்துவெளியிட்டு இருப்பதை நீங்கள் அறிந்து அது பற்றிய உன்மையை அறிந்து கொள்ளும் எண்ணத்தில் எமக்கு அக்கருத்தினை அனுப்பிவைத்தால் அது பற்றிய உண்மைகளையும் அதாரங்களுடன் தெளிவுபடுத்தி மக்கள் நேர்வழி என நினைத்து வழிகேட்டில் சென்றுவிடாதிருக்க எம்மால் முடியுமான முயற்சிகளை இன்ஷா அல்லாஹ் தொடரந்;து செய்து கொன்டே இருப்போம் என்பதை வாசகர்களுக்கு அரியதருகிறோம்.
மீன்டும் சந்திக்கும் வரை
அன்புடன் ஆசிரியர்
- இஸ்லாமும் தலைமைத்துவமும்
இஸ்லாம் என்பது அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ள (தீனுல் பித்ரா) இயற்கை மார்க்கமாகும் இஸ்லாத்தின் எந்தவொரு அம்சமும் இயற்கையுடன் முரண்படக்கூடியதல்ல இதனை புரிந்துகொள்ளாத சிலர் தமது சுயகருத்துக்களை இஸ்லாம் எனும் பெயரில் மக்கள் முன்வைக்கும் போது இஸ்லாத்தின் தூய்மைக்குக் களங்கம் ஏற்படுவதுடன் இஸ்லாமும் ஏனைய மதங்களை போன்று மனிதர்களால் புனையப்பட்ட கற்பனைகள் எனும் எண்ணம் சிந்திக்ககூடிய உள்ளங்களில் தோன்றுகின்றது. இத்தகைய நிலைமை தோன்றும் போதெல்லாம் இந்நிலைய மாற்றி அல்லாஹ்வுடைய தீனைத் துய்மையாக மக்கள் முன் வைப்பது முஸ்லீம்களின் கடமையாகும் இக்கடமையைச் செய்யக்கூடிய முஸ்லீம்களுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நன்மாராயம் காத்திருக்கின்றது.
இஸ்லாத்தின் உயிரோட்டத்தையே புரிந்துகொள்ளாமல் சிலர் தமது மனோயிச்சைப்படி அரைகுறை விளக்கத்துடன் இஸ்லாத்தின் மூலாதாரங்களாகிய குர்ஆனையும் ஹதீஸையும் தொட்டுக்கூடப் பார்க்காமல் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததன் காரணமாக வெறும் சடங்குகளாக சிலவேளை அறபு மொழியிலே சூட்டப்படுகின்ற ஒரு பெயரோடு சுருங்கியதாகக் கருதப்படுகின்றது.
மனிதன் கூடி வாழக்கூடிய தன்மையைக் கொண்டவனாகவே காணப்படுகின்றான் மனிதர்களுக்குமத்தியில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பொதுமுயற்ச்சியும் கூட்டாகவே மேற்கொள்ளப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும் இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் என்பதால் இஸ்லாமும் இந்நத் தன்மையிலிருந்து வேறுபடாமல் கூட்டமைப்பில்லாமல் இஸ்லாமே இல்லை என உமர் (ரழியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் கூறக்கூடிய அளவுக்கு அதனை ஏற்றுக் கொன்டோரை ஒரே தலைமைத்துவத்தைக் கொண்டு, ஒரேகூட்டமைப்பாக வாழுமாறு பணிக்கின்றது.
மனிதனின் மற்றுமொரு நிலை அவனது ஆரம்பம் முதல் இறுதிவரை அவன் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றான் சிறுபிள்ளையாக இருக்கும்போது பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்கின்றான் சிறிது வளர்து பாடசாலை செல்ல ஆரம்பிக்கும்போது பெற்றோறின் கட்டுப்பாட்டுடன் ஆசிரியர்களின் கட்டுப்பாடும் சேர்ந்;து விடுகின்றது தனது நாட்டை ஆட்சி செய்யக்கூடியோறுக்கு கட்டுப்படவேன்டிய நிலையும் அவனுக்கு இருக்கின்றது இத்தகைய கட்டுபாடுகளுக்கும் மேலாக அவன் எவரிடமாவது ஊழியம் செய்பவனாக இருந்தால் அவன் ஊழியம் செய்யக்கூடியோருக்கும் அவரது நிர்வாகத்திற்கும் கட்டுப்பட வேண்டியிருக்கினறது. அதே போல் மனிதன் எந்த சமூகத்தில் வாழ்கின்றானோ அந்தச் சமூகத்தின் கலாச்சாரங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் அவன் கட்டுப்பட வேன்டியிருக்கின்றது. இப்படி மனிதன் ஏனையோரது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவனாகவே வாழ்கின்றான். இதன்மூலம் அவனது வாழ்வு ஒழுங்கமைக்கபட்டாதகவும் பிரயோசனங்களை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
இதே போன்றுதான் இயற்கை மார்கமாகிய இஸ்லாமும் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொன்டு அமைக்கபட்டுள்ளது. இஸ்லாம் எனும் அரபு வார்தையின் பொருள் அடிபணிதல், சரணடைதல் என்பதாகும். அந்த சொல்லிலிருந்து பிறந்ததுதான் முஸ்லிம் எனும் பெயர். அடிபணிந்து கட்டுப்பட்டு நடக்கக் கூடியவனை முஸ்லிம் எனக்கூறப்படும் யாருக்கு அடிபணிவதன் மூலம் ஒருவன் முஸ்லிமாக (அடிபனிந்தவனாக)மாறுகின்றான் என்பதை அல்குர்ஆன் கூறும்போத.
ஆம! யார் அல்லாஹ் கண்காணிக்கின்றான் எனும் உணர்வுள்ளவறாக தனது முகத்தை அல்லாஹ்வுக்காக ஒப்படைக்கின்றாரோ அவருக்கு அவரது கூலி அவரது ரப்பிடத்தில் உன்டு (2:112)
நபிமார்கள் வாழந்;தபோது அவர்கள் முன்வைத்த இஸ்லாம் எனும் கொள்கையை அந்த நபிமார்களிடம் வந்த ஏற்பதன் மூலம் மக்கள் முஸ்லீம்கள் ஆனார்கள்.நபிமார்களுடைய காலத்தில் தலைமைத்துவப் பொறுப்பு நபிமார்களிடமே காணப்பட்டதால் இஸ்லாத்தை ஏற்று முஸ்லீம்களாகக் கூடியவர்கள் தங்களுக்குரிய நபியிடம் வந்து அல்லாஹ்வுக்கும் அந்த நபிக்கும் கட்டுப்பட்டு நடப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். அதாவது பைஅத்செய்து இஸ்லாத்தை ஏற்றார்கள். எங்களுக்கு முன்மாதிரியான ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றவர்களும் இவ்வாறே இஸ்லாத்தை ஏற்றிறுக்கின்றனர். ஊதாரணத்திற்காக பின்வரும் ஹதீஸை கூறலாம்.
அம்ரிப்னு ஆஸ் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள் :
அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை ஏற்படுத்தியபோது ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த உங்களுடைய வலக்கரத்தை உங்களுக்கு பைஅத் (உடன்படுக்கை) செய்வதற்காக நீட்டுங்கள் எனக் கூறினேன். உடனே தங்களது வலக்கரத்தை நீட்டினார்கள். அப்போது எனது கையை (நான்) மடக்கி கொன்டேன் அம்ரே! உமக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டார்கள் (நான் ஒரு) நிபந்தனையிடப் போகிறேன் எனக்கூறினேன், என்ன நிபந்தனையிடப் போகிறீர் எனக் கேட்டார்கள். நான் மன்னிக்கப்பட வேன்டும் எனக்கூறினேன். (அதற்கு ) அம்ரே! இஸ்லாத்தைத் தழுவுதல் அதற்கு முன்னால் உள்ள (பாவங்களை) அழித்து விடுகின்றது. ஹிஜ்ரத் செய்தல் அதற்குமுன்னால் உள்ளவற்றை அழித்துவிடுகின்றது என்பது உமக்குத் தெரியாதா? எனக்டே;டார்கள்
(ஸஹீஹ் முஸ்லிம்-கி.ஈமான்)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் பைஅதுச் செய்து இஸ்லாத்தை ஏற்றதற்கு மற்றுமொறு ஆதாரம் பின்வருமாரு:
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:
ழுpமாத் என்பவர் மக்காவிற்கு வந்தார். அவர் அஸ்த் சனுஆ கோத்திரத்தை சேர்ந்தவர். வியாதிகள் தீர மந்திறிக்ககூடியவராக இருந்தார். அப்போது மக்காவில் உள்ள சில மடையர்கள் நிச்சயமாக முஹம்மதுக்கு பைத்தியம் எனக்கூறுவதை செவிமடுத்தார். உடனே அந்தமனிதரை சந்தித்தால் சிலவேளை அல்லாலாஹ் என்னுடைய கைகளால் அவரைக் குணப்படுத்தலாம் எனக்கூறினார். பின்னர் (ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களை அவர் சந்தித்து முஹம்மதே! நிச்சயமாக நான் இந்த நோய்களுக்கு மந்திரிக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவர்ளை எனது கைகளால் குனப்படுத்துகின்றான் உமக்கு (குணடைய நோக்கம்) இருக்கிறதா? எனககேட்டார் உடனே ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம் அவனிடம் உதவியும் தேடுகிறோம் அல்லாஹ் யாரை நேர்வழி படுத்துகின்றானோ அவனை வழிகெடுக்க கூடியவர் எவருமில்லை, எவனை வழிகெடுத்து விடுகின்றானோ அவனை நேர்வழி படுத்துவோரும் எவரும் இல்லை அல்லாஹ்வைத் தவிர எந்த இலாஹூம் இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு எந்த இணையும் கிடையாது எனவும் அத்துடன் நிச்சயமாக முஹம்மத் ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவனது அடியாரும் அவனது தூதரும் ஆவார்கள் எனவும் நான் சான்று பகர்கின்றேன். நிற்க.....! எனக்கூறினார்கள் உடனே உங்களது வார்தைகளை எனக்கு மீன்டும் கூறுவீராக! எனக்கேட்டார். அவற்றை அவருக்கு மூன்று முறை ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கவர் நிச்சயமாக நான் குறிகாரர்களினது வார்த்தையையும். சூனியக்காரர்களது வார்த்தையையும் கவிஞர்களின் வார்த்தையையும் கேட்டிருக்கின்றேன் உம்முடைய இந்த வார்த்தைகளைப்போன்று அறவே நான் கேட்டதில்லை அவை கடலின் ஆழத்தை அடைந்து விட்டன. எனக்கூறிவிட்டு இஸ்லாத்தின் உங்களுக்கு பைஅத் செய்வதற்காக உங்களது கையை தாருங்கள் எனக்கூறினார் பின்னர் அவர்களிடம் பைஅத் செய்தார். பிறகு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உமது கூட்டத்தாருக்குமா? எனக்கேட்டார்கள் எனது கூட்டத்தாருக்காகவும் (பைஅத் செய்கிறேன்) எனக்கூறினார்.
(ஸஹீஹ் முஸ்லிம்-கி.ஜூம்ஆ)
அமீரின்றி முஸ்லீமாக இருக்க முடியுமா?
இஸ்லாத்தின் பார்வையில் இஸ்லாம் எனும் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொள்ளாத வரையில் ஜமாஅதுல் முஸ்லிமீனும் அவர்களுக்கான ஒரே இமாமும் காணப்படும் போது அந்த இமாமுக்கு உடன்படிக்கை செய்து கட்டுப்படுவதன் மூலம் வெளிப்படுத்தாதவரை அவன் முஸ்லீமாக முடியாது நபிமார்களின் வருகை முடிந்து விட்ட இன்றைய காலத்தில் முஸ்லீம் என்பவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முஸ்லீம்களின் கூட்டமைப்பாகிய ஜமாதுல் முஸ்லிமீனின் அமீருக்கும் கட்டுப்படுவது கடமையாகின்றது.
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
யார் தனக்கென ஜமாஅதிற்கான ஒர் இமாம் இல்லாத நிலையில மரனிக்கின்றாறோ நிச்சயமாக அவரது மரனம் ஜாஹிலிய்ய மரணமாகும் (முஸ்தத்ரக் ஹாகிம்-ஸஹீஹ்)
இந்த ஹதீஸின் மூலம் இஸ்லாம் எனும் கொள்கையை அதனைச்சொல்லக் கூடிய முஸ்லீம்களின் தலைமைத்துவதிற்கு கட்டுப்படுவதன் மூலம் ஏற்றுக் கொள்ள வேன்டும் என்பது உறுதியாகின்றது. அந்த ஒரே தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாத நிலையை ஜாஹிலிய்யத் என இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. அறியாமை என்ற பொருளைக்கொண்ட இச்சொல் இஸ்லாத்திற்க்கு அப்பாற்பட்ட நிலையைக் குறிப்பதற்காக குர்ஆனிலும் ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது உதாரத்திற்கு இந்த அல்குர்ஆனிய வசனத்தைப் பாருங்கள்.
ஜாஹிலிய்ய சட்டதிட்டங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கைக் கொன்ட மக்களுக்குத்தீர்ப்பு அளிப்பதில் அல்லாஹ்வை விட அழகானவன் யார்?
(5:50)
எனவே இந்த வசனத்தில் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட சட்டத்தை குறிக்கும் போது ஜாஹிலிய்ய சட்டம் என அல்லாஹ் கூறுகின்றான். எனவேல இஸ்லாமிய கூட்டமைப்பின் (ஜமாஅதுல் முஸ்லிமீனின்) தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாத நிலையில் அதாவது தனக்கென ஒரு இமாம் இல்லாத நிலையில் மரணிப்பது என்பது இஸ்லாத்தின் பார்வையில் இஸ்லாத்திற்கு அப்பாலிருந்து மரணிப்பதாகும்.
- தலைமைத்துவத்திற்குரிய தகுதிகள்
தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றக்கூடிய (முஸ்லீம்களின கூட்டமைப்பு) ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கு தலைமை தாங்கக்கூடிவருக்கு சில தகுதிகள் கானப்படவேன்டும் என இஸ்லாத்தின் முலாதாரங்களான குர்ஆனும் ஹதீஸூம் கூறுகின்றன. நபிமார்களின் காலத்தில் தலைமைத்துவத்திற்குரியவரை தகுதி கண்டறியும் பொறுப்பு மக்களுக்கு இருக்கவில்லை. ஏனெனில் அந்த நபிமார்களை நேர்வழி காட்டக் கூடிய தலைவர்களாக அல்லாஹ் தெரிவு செய்திருந்தான். இதுபற்றி அல்லாஹ் கூரும் போது:
மேலும் அவர்களை (நபிமார்களை) எமது கட்டளைப்படி இமாம்களாக (தலைவர்களாக) ஆக்கினோம். (21:73)
நபிமார்களின் பிறகு தோன்றக்கூடிய முஸ்லீம்களின் தலைவருக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டிருக்கும் தகுதிகள் இருக்கின்றனவா எனக் கண்டறிவது முஸ்லீம்களின் கடமையாகும். முஸ்லிம்களின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பதற்கூரிய தகுதிகளாக மூன்று விடயங்களை இஸ்லாம் கூறுகின்றது.
1. முஸ்லீம்களை வழிநடாத்தும் திறமையுல்ல
முஸ்லீமாக இருத்தல்
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடவுங்கள். (அவ்வாரே அல்லாஹ்வுடைய) தூதருக்கும் உங்;களில் நின்றுமுள்ள அதிபருக்கும் வழிப்பட்டு நடவுங்கள். (4:59)
இவ்வசனத்தில் உங்களில் நின்றுமுள்ள தலைவர்களுக்கு கட்டுப்படுங்கள் என அல்லாஹ் கூறுவதிலிருந்து முஸ்லீம்களின் தலைவர் முஸ்லீமாக இருக்க வேன்டும் என்பது தெளிவாகின்றது. அதேபோல் முஸ்லீம்களின் தலைவரிடத்தில் தெளிவான குப்ர் தோன்றும் போது அவர்களது அதிகாரத்தை பறித்துவிட வேண்டும் எனும் ஹதீஸூம் முஸ்லீமாக இருக்கும் வரைதான் ஒருவருக்கு முஸ்லீம்களின் தலைவராகும் தகுதி இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
உபாதா இப்னு ஸாபித் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் பைஅத் செய்யுங்கள் அப்போது அவர்களுக்கு நாம் பைஅத் செய்தோம். விருப்பிலும் வெருப்பிலும் சிரமத்திலும் இலகுவிலும் எம்மைவிட பிறருக்கு முன்னுரிமையலித்த போதிலும் (அமீரது கட்டளைக்கு ) செவிமடுத்து கட்டுப்படவேன்டும் என்பதும் தலைமைத்துவத்தில் இருப்போரிடத்தில் அல்லாஹ்விடமிருந்து வந்த தெளிவான ஆதாரத்துடன் கூடிய குப்ர் காணப்பட்டாலேயன்றி அவர்களிடத்திலிருந்து தலைமைத்துத்தை பரிக்கக் கூடாது என்பதும் எம்மிடம் பைஅத் (உறுதிமொழி) எடுத்தவிடயங்களில் உள்ளவையாகும
(ஸஹீஹ் முஸ்லிம் - கி.இமாரா)
2.ஆணாக இருத்தல்.
அல்குர்ஆனிலே அல்லாஹ் பின்வருமாரு கூறுகின்றான்:
பெண்களின் நிர்வாகிகளாக ஆண்களே இருக்கின்றனர் ஏனெனில் அவர்கள் ஒருவரைவிட மற்றவரை அல்லாஹ் மென்மையாக்கி வைத்திருக்கின்றான் அத்துடன் (ஆன்கள்) தங்களது பொருள்களிலிருந்து (பென்களுக்காக) செலவும் செய்கினறனர் (4:34)
எனவே நிர்வாகத்திலே மிக உயர்த நிர்வாகப் பொறுப்பாகிய முஸ்லீம்களின் தலைமைத்துவப் பொறுப்பு ஒரு ஆணிடமே இருக்க வேன்டும் என்பதை மேற்கண்ட அல்குர்ஆனிய வசனம் காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல் பாரசீகர்கள் தமது அரசர் மரணித்துவிடவே அந்த இடத்துக்கு ஒரு பெண்னை நியமித்தபோது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் விதியைக கூறினார்கள்:
தங்களது அதிhரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் எந்த ஒரு சமுதாயமும் நிச்சயமாக வெற்றி பெறாது.
(ஸஹீஹ்ஹூல் புஹாரி)
எனவே முஸ்லீம்களின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கக்கூடியவர் ஆணாக இருக்க வேன்டும் என்பது நிபந்தனயாகும்.
3. அல்லாஹவுடைய வேதத்தைக்கொனடு வழிநடத்துதல்!
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவின்போது பின்வருமாறு முஸ்லீம்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட அடிமை தான் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொனடு வழி நடாத்தும் வரைக்கும் அவரின சொல்லைக் N;கட்டு வழிபட்டு நடவுங்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் - கி.இமாரா)
அல்லாஹவுக்கு மாறுசெய்யும் விடயத்தில் கட்டுப்பாடு கிடையாது என்பதை ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
முஸ்லீமான ஒருவர்மீது பாவமானதை ஏவப்பட்டாலேயன்றி செவிமடுத்து கட்டுப்படுவது கடமையாகும். பாவத்தைக் கொன்டு ஏவப்பட்டால் எவ்வித செவிமடுத்தலோ, எவ்வித கட்டுப்பாடோ கிடையாது.
(ஸஹீஹ்.முஸ்லிம்-கி.இமாரா)
அல்லாஹ்வுடைய வேதத்தைக்கொன்டு வழிநடாத்தும் வரைக்குமே அமீருக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிபந்தனையிட்டிருப்பதால் நிபந்தனை தவரும் போது நிபந்தனையிட்டதும் இல்லாமல்போய்விடும்
என்பது விதியாகும். எனவே முஸ்லீம்களின் அமீர் அல்லாஹ்வுடைய வேதத்தைக்கொண்டு வழிநடத்துதல் என்பது அவருக்குரிய தகுதிகளில் ஒன்றாகும்.
முஸ்லீம்களின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பதற்குரிய தகுதிகளாக இம்மூன்றும் தான் அல்லாஹ்வுடைய வேதத்தில் இருக்கின்றன. இதற்கும் அப்பால் வேறு சில தகுதிகளும் அவசியம் என நரகின் பால் அழைக்கக்கூடிய சில தலைவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து சரியான எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காது வாதாடுகின்றனர். ஆந்த தகுதிகள் எவை என்பதையும் அவை இஸ்லாத்தில் ஏற்கக் கூடியனவா? என்பதையும் பின்னால் விபரிக்கின்றோம்.
முஸ்லீம்களின் தலைமைத்துவதிற்குக்
கட்டுப்படுவதன் அவசியம்.
1. மூன்று முஸ்லீம்கள் தோன்றும் போது அவர்களுக்கென ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்துவது இஸ்லாமிய பார்வையில் கடமையானதாகும். அந்த தலைமைத்துவத்தையும் அந்த கூட்டத்தையும் தான் ஜமாஅதுல் முஸ்லிமீனும் அவர்களின் தலைமைத்துவமும் எனும் பெயரால் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தலைமைத்துவம் கானப்படுகின்றபோது இஸ்லாத்தை ஏற்;க விரும்பும் ஒருவர் அந்த கூட்டமைப்பிடமே செல்ல வேண்டும் எனும் இஸ்லாமிய விதியைக் கொண்டே இஸ்லாமியத் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதன் அவசியத்தை எவரும் புரிந்துகொள்ளலாம்;.
2. முஸ்லீம்களின் தலைமைத்துவத்திற்கு வழிப்படுவதன் அவசியத்தை பற்றி அல்லாஹ் பின் வருமாறு கூறுகிறான்:
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடவுங்கள் (அவ்வாரே அல்லாஹ்வுடைய) தூதருக்கும் உங்களில் நின்றுமுள்ள அதிபருக்கும் வழிப்பட்டு நடவுங்கள்.
(4:59)
3. முஸ்லீம்களின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவது சுவனம் செல்ல நினைப்பவருக்கு இன்றியமையாததாகும்.
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
ஐந்து விடயங்கள் உங்களுக்கு நான் ஏவுகின்றேன்: கூட்டமைப்பாக இருங்கள், செவிமடுத்து நடவுங்கள், கட்டுப்பட்டு நடவுங்கள், ஹிஜ்ரத்து செய்யுங்கள், அல்லாஹ்வின் பாதையில் முயற்ச்சி செய்யுங்கள் மேலும் யார் ஜமாஅதி(கூட்டமைப்பில் ருந்து சாண் அளவு வெளியேருகின்றாறோ (அவர்) திரும்பி வந்தாலேயன்றி நிச்சயமாக அவர் தனது கழுத்திலிருந்து இஸ்லாமிய வலையத்தை களைந்து விட்டார்;. எவர் (பிரிவினைவாத) ஜாஹிலிய்யக் குரல் கொடுக்கினறாறோ அவர் நரகின் எறி கொள்ளியாவார். அவர் நோன்பு நோற்று தொழுது தான் ஒரு முஸ்லிம் எனவாதிட்டாலும் சரியே.
(அஹ்மத்.திர்மிதி-ஸஹீஹ் மிஷ்காத்:3694)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:.
யார் நரகிலிருந்து தூரமாக்கப்பட்டு சுவனத்தில் நுழைக்கப்பட வேன்டுமென விரும்புகின்றாரோ அவர் அல்லாஹ்வைக் கொன்டும் மறுமை நாளைக்கொன்டும் விசுவாசம் கொண்ட நிலையில் அவருக்கு அவரது மரனம் வரட்டும். அத்துடன் மனிதர்கள் தன்னுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேன்டு எனஅவர் விரும்புகின்றாறோ அவ்வாரே அவர்களுடன் நடந்து கொள்ளட்டும். மேலும் யார் இமாமுக்கு பைஅத் செய்திருக்கின்றாறோ தனது கையின் (உட்)புறத்தையும் தனது உள்ளத்தின் நம்பிக்கையையும் அவருக்குக் கொடுத்திருக்கிறாறோ அவர முடிந்தால் அவருக்கு கட்டுப்படட்டும் மற்றொருவர் அவரோ(இமாமோ)டு போட்டி போடவந்தால் அவரது களுத்தை வெட்டி விடுங்கள்
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா)
தலைமைத்துவத்திற்கு மாறு செய்தலும்
அதனை விட்டு வெளியேறுதலும்
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
யார் எனக்கு வழிப்படுகிறாறோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுவிட்டார் யார் எனக்கு மாறு செய்கின்;றாறோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார் யார் அமீருக்கு வழிப்படுகின்றாறோ நிச்சயமாக அவர் எனக்கு வழிப்பட்டுவிட்டார் யார் அமீருக்கு மாறு செய்கின்றாறோ நிச்சயமாக அவர் எனக்கு மாறு செய்துவிட்டார்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமரா)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
யார் தனது அமீரிடத்தில்; வெறுக்கக்கூடிய ஏதேனுமொன்றைக் காண்கிறாறோ அவர் பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் எவரேனும் ஒருவர் ஜமாஅத்தை விட்டும் ஒரு சாண் அளவு பிரிந்து மரணிப்பாரெனில் அவரது மரணம் ஜாஹிலிய்ய மரணமாகவேயன்றி அமையாது.
(ஸஹீஹ் புஹாரி கி.அஹ்காம்)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
நிpச்சயமாக எனக்குப் பிறகு சிலருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதுடன் நீங்கள் வெறுக்கக் கூடிய (பல) விடயங்களும் ஏற்படும் எம்மில் யார் அந்த நிலையை சந்திக்கின்றாறோ அவருக்கு தாங்கள் கட்டளையிடுவது என்ன? என (தோழரகள்) கேட்டார்கள். நீங்கள் செலுத்த வேன்டிய கடமையைச் செலுத்துங்கள் உங்களுக்கு கிடைக்க வேன்டியதை அல்லாஹ்விடம் கேளுங்கள்
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள:
யார் கட்டுப்பாட்டிலிருந்து கையை உருவிக் கொள்கின்றாறோ மறுமை நாளில் (அவர் முஸ்லிம் என்பதற்கு) எவ்வித ஆதரங்களும்மின்றி அல்லாஹ்வை சந்திப்பார்.
(ஸஹீஹ் முஸ்லிம் -கி.இமாரா)
மேற்காணப்படும் ஹதீஸ்களில் இஸ்லாமும் தலைமைத்துவமும் ஒன்றாகவே கணிக்கப்பட்டிருப்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம்களின் அமீருக்கு கட்டுப்படுவதை தவிர இஸ்லாத்தன் ஏனைய அனைத்துக் கடமைகளையும் செய்வதானது இஸ்லாத்தையே ஏற்காத ஒருவர் இஸ்லாமியப் போதனைகளின்படி நடப்பதற்கு சமமானது. எனவே மேலே தரப்பட்ள்ள ஹதீஸ்களின் மூலம் ஜமாஅதுல் ழுஸ்லிமீனின் அமீருக்கு மாறு செய்தல் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்வதாகும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேரிச் செல்லல் இஸ்லாத்திலிருந்தே வெளியேரிச் செல்வதாகும் என்பன தெளிவாக புரிகின்றது. எனவே இந்த ஹதீஸின் தீர்ப்புப்படி முஸ்லிம்களின் அமீருக்கு கட்டுப்பட்டு நடப்பது கடமையாகும். அந்த அமீருக்கு மாறு செய்வது அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரிய குற்றமாகும். எவராவது ஒரு முஸ்லிம் அந்த அமீரின் கட்டுப்பாட்டிலிருந்து தனது கையை உருவி விட்டு அவர் மீன்டும் அமீருடைய கட்டுப்பாட்டிற்குள் வராத பட்ச்சத்தில் இஸ்லாத்தை விட்டே வெளியேரிச் செல்கிறார்.
இத்தீர்ப்புகளைப் பார்ப்பதன் மூலம் முஸ்லிம்களின் அமீருக்கு கட்டுப்பட்டு அதில் மரணிக்கும் வரைக்கும் நிலைத்திருப்பது சுவனம் நுழைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என்பது தெளிவாகின்றது. அறிவுரீதியாக சிந்திப்போரும் இந்த ஹதீஸ்களின் தீர்ப்பு முற்றிலும் சரியானதாகும் என்பதை ஏற்றுக்கௌ;வார்கள். அதாவது; இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்றுக் கொன்டவன் என்பதே முஸ்லிம் எனும் வார்த்தைக்கு பொருளாகக் காணப்படும் போது அக்கொள்கையிலிருந்து அக்கொள்கையை ஏற்றுக்கொண்டோரிலிருந்து அவர்களின் அமீரின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேரிச் செல்பவனை எப்படி அந்தக் கொள்கையை ஏற்றுக்கொனடவன் எனக்கூறலாம்?
இஸ்லாத்தை முறிக்கக் கூடியவற்றுள் இதுவும் ஒன்று
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
எந்த ஒருவரானாலும் தனது தந்தையை அறிந்திருந்தும் தான் வேறு ஒருவரது மகன் என அவர் வாதிட்டால் அவர் அல்லாஹ்வை நிராகரித்தவனாகவேயன்றி இருக்கமாட்டார் தனக்கு எவ்வித உறவும் இல்லாத ஒர் கோத்திரத்தைத் தனது மூதாதையர் என வாதிட்டால் அவர் தனது இடத்தை நரகத்தில் ஏற்படுத்தி கொள்ளட்டும்
(ஸஹீஹ் புஹாரி-கிமனாகிப்)
முஸ்லிம்களின் தலைமைத்துவமும் கூட்டமைப்பும் இல்லாவிட்டால்......?
இஸ்லாத்தையும் இஸ்லாத்திற்கும் தலைமைத்துவத்திற்குமுள்ள தொடர்பையும் புரிந்து கொண்ட ஒருவர் முஸ்லிம்களின் கூட்டமைப்பும் அவர்களுக்கென ஒரு அமீரும் இல்லாத காலத்தில் வாழ நேரிட்டால் அவர் எக்காலத்திலும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்படக்கூடியது என வாக்களிக்கப்பட்ட அல்லாஹ்வின் வேதத்தை முற்றாக நம்பி அவர் ஒரு முஸ்லீமாக வாழ வேண்டும். தலைமைத்துவம் இல்லாமல் கூட்டமைப்பு இல்லாமல் தம்மையும் முஸ்லீம்கள் என வாதிக்கக் கூடிய பிரிவுகளுடன் ஒரு முஸ்லிம் ஒருபோதும் இணையக்கூடாதென ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்ததுடன் ஓரே தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பின்றி முஸ்லீம்கள் எனவாதிக்கக்கூடியோரை நரகின்பால் அழைக்கக்கூடிய பிரிவுகள் எனவும் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியுள்ளார்கள்.
பிரிவுகள் காணப்படக்கூடிய காலத்தில் நான் வாழ நேரிட்டால் எனக்குத் தாங்கள் கட்டளையிடக் கூடியதென்ன? என ஹூதைபா ரலியல்லாஹூ அன்ஹூ ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி கேட்டபோது ஜமாஅதுல் முஸ்லிமீனையும் அவர்களது இமாமையும் பற்றிப் பிடிப்பீர்;களாக! எனக்கூறினார்கள் அதற்கு ஹூதைபா ரலியல்லாஹூஅன்ஹூ அவர்களுக்கென ஒரு ஜமாஅதும் ஒரு இமாமும் இல்லையென்றால்? எனக் கேட்டபோதுஅவ்வனைத்துப் பிரிவுகளை விட்டும் ஒதுங்கு வீராக! உமக்கு மரணம் வரும் வரையில் ஏதேனும் ஒரு மரத்தைதான் கடித்திருக்க வேண்டிய(தனித்த)நிலை ஏற்படினும் சரியே!' எனக் கூரினாரகள்.
(ஹீஹ் புஹாரி-ஸஹீஹ் முஸ்லிம்)
எனவே ஜமாஅதுல் முஸ்லிமீனும் அவர்களுக்கென ஒரு இமாமும் இல்லாதபோது தனித்து விடும் முஸ்லிம்கள் மூன்று பேர்கள் சேர்ந்து விடும்போது அவர்களுக்கென ஒர் அமீரை தேர்ந்தெடுப்பது அவர்கள் மீது கடமையாகவும் அப்படி செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு தடைசெய்யப்பட்ட ஒன்றாகவும் ஆகிவிடுகின்றது.
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பூமியில் பாலைவனத்தில் இருக்கக்கூடிய மூவருக்குக்கூட அவரகளிள் ஒருவரை அமீராக நியமிக்காதிருத்தல் ஆகுமானதல்ல.
- முஸ்லிம்களின் வழிகாட்டியார்?
மனிதர்கள் நேர்வழி என நினைத்து பல்வேறு வழிகேடுகளில் தட்டழிந்து கொன்டிருந்தபோது அல்லாஹ்வை அடிபனியக்கூடிய ஒரு முஸ்லிம் சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்காக அல்லாஹ் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான். இப்ராஹீம் அலைஹிவஸல்லம் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்,
எங்கள் இரட்சகனே! எங்கள் இருவரையும் உனக்கு (முற்றிலும்) கீழ்படிகின்ற (முஸ்லிமான)வர்களாகவும் எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு கீழ்படிகின்றவர்களாகவும் ஆக்கிவைப்பாயாக!.... (2:128)
எங்கள் இரட்சகனே! (என் சந்தயினரான) அவர்களிலிருந்து அவர்களில் ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர்களுக்கு அவர் உன்னுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து வேதத்தையும் ஞானத்தையும் கற்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கிவைப்பார். (2:129)
இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றுவதாக வாதாடிக்கொண்டிருந்த முஷ்ரிக்கீன்களுக்கும், தக்க ஆதாரங்கள் இன்றி தாமே சுவனம் செல்லக்கூடியோர் எனத் தனித்தனியாக வாதாடிக்கொண்டிருந்த யூத கிறிஸ்தவர்களுக்கும் மத்தியில்தான் அல்லாஹ் உண்மையிலேயே இப்ராஹீமைப் போன்று இணை வைப்பதிலிருந்து முற்று முழுதாக விடுபட்டு அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்வதன் மூலம் சுவனம் செல்லத்தகுதியானோர் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான். தாம் அனுப்பப்பட்ட நோக்கத்தை பூர்த்தி செய்யுமுகமாக அந்த ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் ஒரு இஸ்லாமிய சமுதாயத்திற்கு அதாவது ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கு அடித்தளம் இட்டு அதனைக்கட்டியெழுப்பி உலகில் அதன் இறுதிக் கடமையின் சில பகுதிகளை நிறைவேற்றிவிட்டுத் தமது கடமையில் தொடர்ந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் அழைப்பு வரவே அவர்கள் அல்லாஹ்விடம் சென்றுவிட்டார்கள். இறுதிக்கடமையை பூர்த்தி செய்வதற்கு செயல்ரீதியான முன்மாதிரி அவசியம் இல்லை என்பதே அல்லாஹ்வின் முடிவு என்பதை நாம் அதிலிரிந்து புரிந்து கொள்ளலாம்.
ஆகவே சுவனம் செல்ல விரும்பும் ஒருவருக்கு மிகத்தெளிவான வழிகாட்டல் வெறும் தத்துவமாக அல்ல நடைமுறை விளக்கத்துடன் முழுமையாகக் காணப்படுகின்றது. எனவே தான் அல்லாஹ் உறுதிபடுத்தி பின்வருமாறு கூறுகின்றான்:
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் அஞ்சி அல்லாஹ்வை அதிகம் நினைவு கூரக்கூடியோருக்கு(ம்) (அப்பன்புகள் கொனட நபித்தோழர்களாகிய) உங்களுக்கு(ம்) நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகியதோர் முன்மாதிரி காணப்படுகின்றது (33:21)
இந்த ரீதியில் ஒருவன் எவ்வாறு முஸ்லிமாகிறான்? அவன் தனது இஸ்லாத்தைப் பறி கொடுக்கக்கூடிய செயல்கள் என்ன? அவன் முஸ்லிமாக இருப்பதற்கு குறைந்த பட்சமாக அவன் செய்ய வேன்டிய கடமைகள் என்ன? முஸ்லிம்களின் கூட்டமைப்பாகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் எப்படித் தோன்றும் அவர்களின் அமீர் ஆட்சியதிகாரம் உள்ளபோது எப்படி நடந்து கொள்ள வேன்டும்? ஆட்சியதிகாரம் இல்லாதபோது எப்படி நடந்து கொள்ள வேன்டும்? போன்றவற்றுடன் சுவனம் செல்ல முயற்ச்சிப்போருக்குத் தேவையான முழு வழிகாட்டல்களும் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன.
முஸ்லிம்; உம்மத்தாகிய ஜமாஅதுல் முஸ்லிமீனை உருவாக்குவதில் அதன் தோற்றமும் ஆட்சியதிகராம் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் வரையிலான அதன் வளர்ச்சியுமே முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். இதற்கான முன்மாதிரி ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தே பெறப்பட வேன்டும் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களது அட்சியதிகாரத்துக்கு முந்திய வாழ்வை கவனித்தால் அங்கு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் தம்மை முஸ்லிம்கள் எனக் கூருவதுடன் சுவனத்திற்காகவும் வாதடக்கூடிய மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வேதத்தை முன்வைத்தார்கள். அக்கொள்கையை ஏற்றுக்கொன்டோறைத் தனது தலைமையின் கீழ் ஒரே சமுதாயமாக கட்டியெழுப்பினார்கள். தலைமைத்துவத்திற்கு முடியுமான வரைகட்டுப்பட்டு நடப்போம் என அவர்களிடம் பைஅத் (உறுதிப்பிரமாணம்) எடுத்தார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் பிறந்த பூமியில் அவர்களது கொள்கையாகிய இஸ்லாத்தை வெளிப்படையாக பின்பற்றுவதில் தடை காணப்பட்டதனால் சுதந்திரமாக அக்கொள்கையை பின்பற்றக்கூடியதோர் பூமியைத் தேடிக்கொன்டார்கள்.
ஜாபிர் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:
ஹஜ்காலத்தின் போது ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் மக்களுக்கு தங்களைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார்கள் அப்படிக் கூறும்போது என்னை தனது கூட்டத்தாரிடம் (சத்தியத்தைக் கூறுவதற்காக) கூட்டிச்செல்லக் கூடியவர் எவரும் இருக்கின்றாறா? ஏனெனில் எனது ரப்பின் வார்த்தைகளை எத்திவைப்பதைவிட்டும் நிச்சயமாக குரைஸ் கோத்திரத்தினர் என்னை தடுத்து விட்டனர் எனக்கூறுவார்கள். ஒரு முறை ஹம்தான் கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் வந்து சத்தியத்தை ஏற்றுக் கொண்டார் பின்னர் அவர்களின் கூட்டத்தினர் அவரைப்பின்பற்றி நடக்காமல் இருந்துவிடுவார்களோ எனப்பயந்து (ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்களிடம் வந்து எனது கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு செய்தியை அறிவித்து விட்டு அடுத்த வருடம் உங்களிடம் வருகிறேன் எனக்கூறினார் அதற்கவர்கள் சரி எனக் கூரினார்கள் அம்மனிதர் சென்றுவிட்டார். ரஜப் மாதத்தில் அன்சார்கள் வந்தார்கள்.
(அஹ்மத் திர்மிதி நசாஇ ஹாகிம்-ஸஹீஹ்)
அலி பின் அபிதாலிப் ரலியல்லாஹூ அன்ஹூ கூறினார்கள்:
அறபிகளிலுள்ள கோத்திரங்களுக்குத் தன்னை(ப்பற்றி) எடுத்துக் கூறுமாறு அல்லாஹ் தனது நபிக்குக் கட்டளை இட்டதும் (அதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்) புறப்பட்டார்கள். நானும் அபூபக்கர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களும் கூட இருந்தோம்.அறபிகள் ஒன்று கூடியிறுக்கக்கூடிய இடத்திற்கு வந்ததும் அபூபக்கர் ரழியல்லாஹூ அன்ஹூ முன்னால் சென்று நீங்கள் யார்? எனக் கேட்டார்கள். அவர்களோ கோத்திரங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள் அதற்கவர்கள் ரபீஆ (கோத்திரத்தைச்) சேர்ந்தவர்கள் எனக் கூறினார். ரபிஆவின் எந்தக்கிளையைச் சேர்ந்தவர்கள்? எனக் கேட்டார்கள் தஹ்ல் கிளை எனக் கூறிவிட்டு நீண்ட நேரம் பலவிடயங்களை கதைத்துவிட்டு இறுதியாக தாங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைக்கூறிவிட்டனர். பிறகு அவ்ஸ், ஹஸ்ரஜ்களின் சபையின்பால் சென்றோம். அவர்கள்தான் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் தங்களது கொள்கையை ஏற்று தங்களுக்கு புகலிடம் அளித்து உதவியும் செய்ததனால் அன்சார்கள் (உதவி செய்வோர்) எனப்பெயர் சூட்டப்பட்டவர்கள். (சத்தியத்தை முன்வைத்து) ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பைஅத்துச் செய்யாது அவரகள் (அந்த இடத்தை விட்டும்) எழும்பவில்லை.
(ஹாகிம் அபூநஈம் பைஹகி-ஹஸன்)
மதீனாவிற்கு சென்றதன் பிறகு அல்லாஹ் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆட்சியைக் கொடுத்தான். அங்குதான் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் இஸ்லாத்தை அதிகாரத்துடன் பின்பற்றினார்கள் அது வரைக்கும் இஸ்லாத்தை ஏற்று தலைமைத்துவத்திற்கு கட்டுப்படக்கூடிய ஒரு முஸ்லிம்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
உலகில் எங்குமே இஸ்லாமிய ஆட்சி இல்லாத இன்று ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத் பல பிரிவுகளாக பிரிந்திருக்கின்றது. எனவே இன்றைய நிலமையில் நாம் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஹிலாபத்திற்கு முந்திய வாழ்வில் என்ன செய்தார்களோ அதனையே செய்ய வேன்டியுள்ளது. அதாவது தூய இஸ்லாமாகிய குர்ஆனையும் ஹதீஸையும் முன்வைத்து அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியோரை தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஒரே சமுதாயமாகக் கட்டியெழுப்ப வேன்டும்.
தலைமைத்துவம் ஒரு ஆய்வு எனும்
கட்டுரையின் சுருக்கம்.
பி.ஜெ தனது தலைமைத்துவம் ஒரு ஆய்வு எனும் கட்டுரையில் கூறியிருப்பதன் சுருக்கம் பின்வருமாறு:
இஸ்லாமிய ஆட்சி (ஹிலாபத்) இல்லாவிட்டால் தலைவரின்றி முஸ்லிம்கள் வாழமுடியும் மேலும் குர்ஆனும் ஹதீஸூம் கூறுகின்ற இமாம்,அமீர் எனும் வார்த்தைகள் ஆட்சி அதிகாரம் கொன்ட ஹலீபாவை குறிக்குமேயன்றி ஆட்சி அதிகாரமற்ற முஸ்லிம்களின் தலைவர்களை குறிக்காது எனவே இன்று இந்தியா போன்ற நாடுகளில் அமீரோ,இமாமோ இல்லை தங்களை அமீர் என்று கூறிக்கௌ;வோர் மார்க்கத்திலே மோசடி செய்கின்றனர். பிரயாணத்திலும் அமீர் நியமிக்கப்பட வேன்டும் எனும் பொருளில் வந்திருக்கக்கூடிய ஹதீஸில் கூட்டுத் தொழுகை நடத்தப்பட வேண்டும் எனும் வார்த்தை சில இடங்களிலும் வேறுசில இடங்களில் அமீர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வந்துள்ளன இவற்றில் சரியானது கூட்டாக தொழுகை நடத்தப்பட வேண்டும் என்பதேயாகும். எனவே அமீர் எனக் கூறக்கூடியவர் ஆட்சி அதிகாரம் கொண்டவரே பிரயாணத்தில் கடமை அமீர் நியமிப்பதல்ல கூட்டுத்தொழுகை நடத்துவதேயாகும்.
மேற்காணப்படுவது தான் பி.ஜெயின் ஆய்வின் சுருக்கம் இனி அவரது ஆய்வு எந்த அளவு உண்மையானது எனப் பார்ப்போம்.
- ஆட்சியதிகாரம் அற்ற அரசியல் தலைமைத்துவம்!
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது நபித்துவாழ்வில் சில காலம் ஆட்சியதிகாரம் உள்ள ஒருவராகவும் சில காலம் தனது கொள்கையாகிய இஸ்லாத்தை வெளிப்டுத்துவதறக்குக் கூட முடியாமல் இருந்தார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். சத்தியத்தை நிராகரிப்பதற்காக எந்த உன்மையை மறைப்பதற்கு பி.ஜெ தலைமைத்துவம் ஓர்ஆய்வு எனும் கட்டுரையில் முழு முயற்சி செய்கிறாரோ அந்த உன்மை அவரது கட்டுரையின் ஆரம்பத்திலேயே அவரால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பி.ஜெ தனது ஆய்வில் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி என் கூறுகிறார் எனபதை பாருங்கள்.
அமீர் கலீபா சுல்தான். அமீருக்கு முஃமினீன் என்பது போனற வார்த்தைகளால் நபி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடப்படவில்லை அதைவிட விரிந்த அதே சமயம் ஆட்சிதலைமையையும் உள்ளடக்கி ரஸூலுல்லாஹ் -அல்லாஹ்வின் துதர் என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டனர் ரஸாலத் - நுபுவ்வத் என்பதில் ஆட்சியும் அடக்கம்.
இவ்வாறு ரிஸாலத்தை அடிப்படையாகக் கொன்டு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் ஆட்சி செலுத்தவில்லை. இஸ்ரவேல் மக்களையும் நபிமார்கள் இப்படித் தான் ஆட்சி செலுத்தியுள்ளார்கள்.
இஸ்ரவேலர்களை நபிமார்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் ஒரு நபி மறைந்ததும் இன்னொரு நபி அவருக்குப் பதிலாக பொறுப்பு வகிப்பார். எனக்குப் பிறகு எந்த நபியம் கிடையாது கலீஃபாக்கள் உருவாகுவார்கள் ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகப் படியாகி விடும் என்று அல்லாஹ்வின் துதர் ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே (அது தொடர்பாக) எங்களுக்கு என்ன கட்டளையிடப் போகிறீர்;கள்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; எனக்கேட்டனர். அதற்கு நபிp ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களில் முதலில் யாரிடத்தில உடன்படிக்கை செய்தீர்களோ அவரிடத்தி;லயே அதை நிறைவேற்றுங்கள் அவர்களுடைய கடமையை அவர்களுக்கு செலுத்தி விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களைக் கண்காணித்ததைப் பற்றி அவர்களிடமே விசாரனை செய்வான் என்று பதில் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா ரலியல்லாஹூ அன்ஹூ ஆதாரம்:புகாரி
இவ்வரு ஹதீஸ்களும் ரிஸாலத் என்பதில் ஸியாஸத் (அரசியல் தலமை)யும் அடங்கும் என்பதற்கு தெளிவான சான்றுகளாக உள்ளன.
(அல்முபீன் - மார்ச் 1999:10,11)
ரஸூலுல்லாஹ் எனும் சொல் ஆட்சியதிகாரம் கொன்ட நபியைக் குறிக்க பயன்படுத்தலாம் என்பது முற்றிலும் உன்மையே. இவ்வார்தை ஆட்சி தலைமையை உள்ளடக்கக் கூடிய என்பதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் ஆட்சியதிகாரம் இல்லாமல் வாழ்ந்த காலத்தில் அவர்களை ரஸூலுல்லாஹ் எனக் கூறமுடியாது என எவராவது வாதித்தால் எப்படி இருக்கும்? இஸலாமிய அறிவுள்ள எவராவது இதனை சரியானது என ஏற்றுக் கொள்வாரகளா? ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எப்போது அல்லாஹ்வால் வஹி அனுப்பப்பட்டதோ அப்போது முதல் அவர் ரஸூலுல்லாஹ்தான் அவர்களுக்கு ஆட்சியதிகாரம இருக்கிறதா? இலலையா? எனும் கேள்விக்கே இடமில்லை. இதே போன்று இமாம் அமீர் எனும் வார்த்தைகள் ஆட்சியதிகாரம உள்ளவருக்குப் பயன் படுத்த பட்டுள்தை வைத்த ஆட்சி இல்லாதவருக்குப் அவ்வார்த்தைகளை பயன் படுத்த முடியாது என பி.ஜெ ஒரு அறிவீனமான வார்தை முன்வைத்து அந்த வாதத்தை நிரூபிப்பதற்காகவே தலைமைத்துவம் ஓர் ஆய்வு எனும் கட்டுரை முழுவதிலும் முயற்சி செய்துள்ளார.; ஆட்சித் தலைவர் என்ற பொருளைக்கொண்ட ரஸூலுல்லஹ் எனும் சொல் ஆட்சியதிகாரம் இல்லாமலே நபியவர்களுக்குப் பயன்படுத்தலாம் எனும் உண்மையை புரிந்து கொண்டவர் மக்கள் பின்பற்றக்கூடிய ஒவ்வொரு தலைவரையும் குறிக்கக் கூடிய இமாம் எனும் சொல் ஆட்சியதிகாரம் உள்ளவர் இல்லாதவர் என்று பாகுபாடு இல்லாமல் பயன்படுத்தலாம் என்பதை புரிந்த கொள்ள முடியாமல் இல்லை.
இங்கு பி.ஜெயால் முன்வைக்கப் பட்;டிருக்கும் ஹதீஸ்கூட அவரது வாதம் அடிப்படையே அற்றது என்பதற்கு தெளிவான ஆதாரமாகும் இந்த ஹதீஸில் பனூஇஸ்ரவேலர்களில் நபிமார்களே அரசியல் நிர்வாகத்தை நடாத்தினார்கள் எனக் கூறப்பட்டுள்ளது ஆனால் பனூஇஸ்ரவேலர்களில் மிகப் பிரபலமான மூஸா அலைஹிஸ்ஸலாம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் போன்ற நபிமார்களுக்கூட ஆட்சியதிகாரம் இருக்கவில்லை என்பது பகிரங்கமான உன்மை. பிர்அவ்னுக்குப் பயந்து மூஸா அலைஹிஸ்ஸலாம் முஸ்லிம்களைக் கூட்டிக ;கொண்டு ஓடியது பற்றி அல்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
(மூஸாஅலைஹிஸ்ஸலாம் பிர்அவ்ன் ஆகியோரது) இரு படைகளும் ஒருவரை ஒருவர் கண்டபோது நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம் என்று மூஸாவுடைய தோழர்கள் கூறினார்கள்.
(26:61)
முழு முஸ்லிம்களையும் கூட்டிக் கொண்டு அதுவும் அல்லாஹ்வின் கட்டளைப்படி ஓடுகின்றவரையும் முஸ்லிம்களின் அரசியல் நிர்வாகத்தைச் செய்யக்கூடியவர் எனத் தெளிவாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இ;ந்த ஹதீஸ் நிரூபிக்கக்கூடிய உண்மை முஸ்லிம்கள் எப்போதுமே தங்களது அனைத்து விடயங்களையும் நிர்வாகிக்கக்கூடிய தலைவாக தங்களில் உள்ள ஒருவரயே ஆக்கக் கொள்வார்கள் என்பதாகும். அந்தத் தலைவருக்கு ஆட்சியதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு முஸ்லிம்கள் கட்டுபட்டு நடப்பார்கள். இந்த இடத்தில் பி.ஜெ பனூ இஸ்ரவேலர்களில் இருந்த நபிமார்கள் ஆட்சியதிகாரம் கிடைத்ததற்குப் பின்னர் தான் அரசியல் நிர்வாகம் செய்தார்கள் என மழுப்ப முடியாது அதற்கு இரன்டு தடைகள் இருக்கின்றன ஒன்று பொதுவாகக் கூறப்பட்டதை குறிப்பிட்தொரு காலத்திற்கு மட்டும் உரியது என வரையறை செய்வதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் அத்தகைய ஆதாரம் எதுவும் பி.ஜே-யிடம் கிடையாது இரன்டாவது பனூஇஸ்ரவேலர்களில் இருந்தாக குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு நபிக்கும் ஆட்சியதிகாரம் இருந்தது என பி.ஜே- நிரூபிக்க வேன்டும் இதுவும் பி.ஜே-யால் முடியாததேயாகும்.
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியதிகாரம் இல்லாமலே முஸ்லிம்களின் அரசியல் நிர்வாகத்தை நாடத்தியிருக்கின்றார்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்து அல்லாஹ்வை நினைவு கூறக்கூடியோருக்கு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது என அல்லாஹ் கூறுகிறான் எனவே இதன் மூலம் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் தோன்றக் கூடிய முஸ்லிம்களின் தலைவராகிய அமீர் அல்லது இமாம் ஆட்சியதிகாரம் இல்லாமலே முஸ்லிம்களின் சகல நிர்வாகத்தையும் நடத்தலாம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகின்றது
சத்தியத்தை தெரிந்திருந்தும் தான் இருக்கும் வழிகேட்டை நிரூபிப்பதற்கு இஸ்லாத்தில் குழறுபடி செய்யும் முயற்சியாகிய தலைமைத்துவம் ஒர்ஆயவு எனும் கட்டுரையின் துவக்கத்திலேயே அல்லாஹ் இவ்வாறு அசத்தியவாதியான பி.ஜே-யின் கையினால் அவரது வாதத்தினை தரைமட்டமாக்கக் கூடிய உண்மையை எழுதச் செயதுள்ளான்
.
ஆட்சியதிகாரம் இன்றி அமீராக முடியுமா?
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.
(நீங்கள்) பிரயாணத்தில மூவர் இருந்தாலும் உங்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளுங்கள் அவர் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் நியமிக்கப்பட்ட அமீரேயாவார்
(அறிவிப்பவர்: உமர். ஆதாரம்-பஸ்ஸார்-ஸஹீஹ்)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள கூறுகிறார்கள்;:
யார் தனக்கென ஜமாஅத்திற்கென ஓர் இமாம் இல்லாத நிலையில் மரணிக்கின்றாரோ நிச்சயமாக அவரது மரனம் ஜாஹிலிய்ய மரணமேயாகும்.
(முஸ்தத்ரக்-ஹாகிம் - ஸஹீஹ்)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
மூன்று பேர் பிரயாணத்தில் சென்றாலும் அவர்களில் ஒருவரை அவர்களுக்கு அமீராக்கிக் கொள்ளட்டும்.
(அபூதாவுத்-ஹஸன் ஸஹீஹ்)
இங்கு குறிப்pடப்பட்டிருக்கும் ஹதீஸ்கள் ஒவ்வொன்றும் முஸ்லிம்கள் மூன்று பேருக்கு குறையாமல இருந்தால் அவரகள் தமக்கென ஓரு அமீரை ஏற்படுத்துவது கடமை அப்படி ஒரு அமீர் இல்லாமல் மரனிப்பது ஜாஹிலிய்யத்தில் மரணிப்பதாகவும் பிரயாணத்தின் போதும் பாலைவனத்தில் இருக்கும் போது கூட முஸ்லிம்கள் அமீரின்றி இருத்தல் அகுமானதல்ல எனத் தெளிவாகக ;கூறுகின்றன.
இந்த இடத்தில்தான் தலைமைத்துவத்திற் குரிய மற்றுமொரு தகுதியாக அமீர் ஆட்சியதிகாரம் கொண்ட கலீபாவாக இருக்க வேன்டும் என பி.ஜெ- குர்ஆனிலோ,ஹதீஸிலோ இல்லாத ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். இவர் முன்வைத்த சுயகருத்து உடைந்து விடும் என்பதற்காக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று ஹதீஸ்களில் அபூதாவுதிலே வரக்கூடிய ஹதீஸின் வாசகத்தை பி.ஜெ குழறுபடி உள்ளதாகக்காட்ட முயற்சிக்கின்றார் ஏனெனில பிரயாணத்தில் மூவர் இருக்கும் போது ஒருவர் அமீராக நியமிககப்படுவதுதென்றால் அவருக்கு ஆட்சியதிகாரம் இருக்காது என்பதை அவரே தனது ஆய்வில ஒப்புக் கொனடுள்ளார். அந்த ஹதீஸின் வாசகம் பற்றி பி.ஜெ கூறுவதாவது:
மேலும் முஹம்மத் பின் அஜலான் என்ற அறிவிப்பாளர் நாபிஉ என்பார் வழியாக அரிவிக்கும் ஹதீஸ்களில் வார்த்தைக் குழப்பம் உள்ளது என்று உகைலி என்ற ஹதீஸ்கலை அறிஞர் குறிப்பிடுகின்றார் அபூதாவூதில் இடம்பெறும் ஹதீஸை முஹம்மத் பின் அஜ்லான் நாபிஉ வழியாகவே அறிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
எனவே விக்கும் முஹம்மத் பின் அஜ்லான் வழியாக மற்றவர்கள் அறிஹதீஸ்களில் மூவர் பயணம் சென்றாளல் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்றே கூறப்பட்டுள்ளது
மேலும் அபூஸஈத் (ரழி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் முஸ்லீமில் இடம்பெற்றுள்ளது மூவர் இருந்தால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்றுதான் அந்த ஹதீஸிலும் கூறப்படுகின்றது
ஆகவே பிரயானத்தில் செல்பவர்கள் தனித்துத்தொழுது விடாமல் மூவரில் ஒருவரை இமாமாக ஏற்படுத்தி தொழ வேன்டும் என்பதுதான் சரியான அறிவிப்பாகும் பயனத்தில் அமீர் ஏற்படுத்துங்கள் என்பது சரியான அறிவிப்பாகாது இப்னு அஜ்லான் நாபிஉ என்ற வழியாக அமைந்திருப்பதே இவ்வாறு முடிவு செய்ய போதுமான காரணமாகும்
(அல்முபின் - 1999 மார்ச் பக்கம் 43)
இந்தவாதத்தில் பல தவறான அம்சங்கள் உள்ளன.
1.அபூதாவூதில வரக்கூடிய ஹதீஸ்பற்றி பி.ஜெ யின் ஆய்வு தவறானதாகும். அந்த ஹதீஸில் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் எனற வாசகம் ஏற்கக்கூடிய ஒன்றே என்பது தான் சரியான முடிவாகும். அன்மையில் வாழ்ந்து மரணித்த ஹதீஸ் கலையரிஞர் நாஸூருத்தீன் அல்பானி என்பவர் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் எனும் அதே வாசகத்துடன் இந்த ஹதீஸை ஹஸன ஸஹீஹ் எனும் ஏற்றுக்கொள்ள முடியுமான தரத்தில் உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். (பார்க்க: ஸஹீஹ்அபூதாவுத் 2272, 2273)
1. அபூதாவூதில் வரக்கூடிய இந்த ஹதீஸ் பற்றி அலசும்போது இமாம் ஷவ்க்hனி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:
இதேபோன்ற அறிவிப்பை ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையுடன் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் அவர்களது மகன் அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் அறிவிக்கும் இரு அறிவிப்புக்கள் பஸ்ஸார் எனும் நூலிலும், இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூ அன்ஹூ மூலமாக ஓர் அறிவிப்பு ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையுடன் தபரானியிலும் பதிவாகியுள்ளன இந்த ஹதீஸ்களில் ஒன்று மற்றொன்றிற்கு சான்று பகர்கின்றது. (அபூதாவுதின் அறிவிப்பாகிய) அபூசயீத் ரலியல்லாஹூ அன்ஹூ அபூஹரைரா ரலியல்லாஹூ அன்ஹூ வாயிலாக அறிவிக்கப்படும் இரு ஹதீஸ்கள் பற்றி இமாம் அபூதாவுத் இமாம் முன்திரி மௌனம் சாதித்துள்ளனர் இவ்விரண்டினதும் அறிவிப்பாளர்களும் அலி இப்னு பஹ்ரைத் தவிர புகாரி முஸ்லிமின் அறிவிப்பாளர்களாவர் அவரும் ஞாபகசக்தி நிரைந்த நம்பகமானவர்.
இமாம் ஷவ்கானி சுட்டிக்காட்டிய ஒவ்வொரு அறிவிப்பிலும ஒருவரை அமிராக ஆக்கிக் கொள்ளட்டும் எனக ;காணப்படுகின்றது எனவே தான் இமாம் ஷவ்கானியவர்கள் 'அனேகமானோர் தலைமைத்துவம் காணப்படுவது கடமையெனக் கூறுகின்றனர் அவர்களுக்கு இவற்றில் ஆதாரம் இருக்கின்றது எனும் கருத்தை கூறுகின்றார்கள்
(நைலுல் அவ்த்தார் - கி. ஆக்ழியா வல் அஹ்காம்)
பிரயாணத்தில்கூட மூவர் இருந்தால் ஒருவரை அமீராக்கிக் கொள்ளுங்கள் எணும் வாசகம் கொண்ட ஹதீஸ்களில் பி.ஜெ சுட்டிக்காட்டியது உட்பட பல அறிவிப்புக்கள் முன்னால் ஆதாரபூர்வமானவைகளாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் ஆட்சியதிகாரம் இன்றி அமீரோ இமாமோ இல்லை எனும் வாதம் உடைந்து விட்டது. ஏனெனில் ஆட்சியதிகாரம் ஒரு நிபந்தனையா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் இது மிக முக்கியமானதாகும் பிரயாணத்தில் இருக்கக்கூடிய அமீரிடம் ஆட்சியதிகாரம் இருக்காது என்பதை பி.ஜெ ஏற்றுள்ளதால் முஸ்லீம்களின் அமீராக இருப்போரிடம் ஆட்சியதிகாரம் இருக்க வேன்டியது அவரது தகுதிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுவது மிகப்பெரியத் தவறு என்பதும் தெளிவாகிவிட்டது அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் எனக்கூறி ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியதிகரம் இல்லாதவருக்கு அமீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளதால் ஆட்சியதிகாரம் உள்ளவருக்கு மாத்திரம்தான் அமீர் என்ற வார்ததை பயன்படுத்தப்படும் எனும் வாதமும் உடைந்து விடுகின்றது.
தனக்கென இமாம் இல்லாத நிலையில் எவர் மரணிக்கின்றாரோ அவர் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கின்றார் எனும் ஹதீஸ் பொதுவான சட்டமேயன்றி இஸ்லாமிய ஆட்சியதிகாரம் காணப்படும் போது அமீர் இல்லாமல் மரணிப்பது தான் ஜாஹிலிய்ய மரணம் எனப் பிரிப்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது எனவே குழப்பதிற்குரிய வாசகங்கள் எனக்கூறி இஸ்லாத்தின் அடிப்படை அம்சத்தை மறுக்க முயற்சி செய்த பி.ஜெ உடைய கூற்று தவறானது என்பது நிரூபனமாகிவிட்டது. சத்தியத்தைத் தெரிந்;து கொன்டும் பி.ஜெ தனது தவறிலேயே அடம் பிடிக்க முடியாதவாரு அவர் குறிப்பிட்டல்லாத பிரயாணத்தில் செல்லக்கூடியோர் மூன்று பேர்களாக இருந்தால் ஒருவரை அமீராக நியமிக்க வேண்டும் எனக் கட்டளையிடக் கூடிய வேறு ஹதீஸ்களையும் முன்வைத்துள்ளோம். இதன் பிறகாவது பி.ஜெ சத்தியத்தை ஏற்றுக்கொள்வாரா?
பி.ஜே தனது ஆய்வில் அதிகாரம் இல்லாமல் இமாமோ அமீரோ இல்லை எனத்தலைப்பிட்டு அத்தலைப்பின் கீழ் பல சிறு சிறு தலைப்புக்களிட்டு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆட்சியதிகாரம் இருந்ததைப்பற்றி குறிப்பிடக்கூடிய ஹதிஸ்களை குறிப்பிட்டுள்ளார் தனி மனிதராக இருந்த ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தியத்தை சொன்னதன் காரணமாக அதனை நபியவர்களிடம் ஓரிருவராக பைஅத் செய்து ஏற்றனர் இவ்வாறு தோன்றிய ஜமாஅதுல் முஸ்லிமீன் பிற்பட்ட காலத்தில் ஆட்சியதிகாரமுள்ள நிலையை அடைந்தது என்பதை எவரும் மறுப்பதில்லை சர்ச்சை என்னவெனில் ஆட்சியதிகாரம் முஸ்லீம்களின் அமீராக இருப்பவருக்கு ஒரு நிபந்தனையா? என்பது தான் பி.ஜெ பல ஹதீஸ்களை முன்வைத்து சர்ச்சைக்கு அப்பாற்பட்ட விடயமான ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு காலத்தில் ஆட்சியதகாரத்தோடு காணப்பட்டார்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார் தன்னுடைய ஆதாரங்கள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது என்பதை உணராமல் பி.ஜெ இங்கு அந்த ஆதாரங்களை முன்வைத்துள்ளாரா............? அல்லது அவரது வழமைப்படி ஒருசாரார் தன்னை நம்பி ஏமாற வேன்டும் எனும் எதிர்பார்ப்பில்தான் இத்தகையொது முயற்ச்சியை செய்தாரா...........?
சர்ச்சை ஹலீபா எனும் நிலையை அடையாத முஸ்லிம்களின் அமீருக்குக் கட்டுப்படுவது கடமையா? இல்லையா? என்பதே ஜமாஅத்தின் இமாமிடம் பைஅத் செய்யாமல் மரணிப்பது ஜாஹிலிய்ய மரணம் என பொதுவாக ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் கூறியதன் பின் ஹலீபாவல்லாத தலைவருக்குக் கட்டுப்படுவது கடமையல்ல என்பதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களது ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டப்பட வேண்டும் முஸ்லிம்களுக்கு ஆட்சியதிகாரம் இல்லாத காலத்தில் இமாம் இருந்தும் அவருக்குக் கட்டுப்படுவதாக பைஅத் செய்யாமல் மரணிக்கக் கூடியவர் முஸ்லிமாகவே மரணிக்கின்றார் எனும் பொருள் கொண்ட குர்ஆன் வசனம் முன்வைக்கப்பட வேன்டும் அவ்வாறில்லாது நாம் நினைத்தபடி சட்டங்களை பாகுபடுத்தும் உரிமை எவருக்குமில்லை.
(இன்ஷா அல்லாஹ் மிகுதி வெகுவிரைவில்)