இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீரின் மற்றுமொரு கண்டுபிடிப்பு!
அறபுச் சொற்களான 'தாஅத்' , 'இத்திபாஃ' ஆகிய இரு சொற்களுக்கிடையில் அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லாத ஒரு வித்தியாசத்தை இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீர் கண்டுபிடித்துள்ளார். இம்முயற்சியில் இவர் ஈடுபடக் காரணம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தீர்ப்புப்படி 'ஜமாஅதுல் முஸ்லிமீனை'த் தவிர ஏனைய பிரிவுகள் அனைத்தும் நரகமே செல்லும் எனும் முடிவிலிருந்து, அவர் தலைமை வகிக்கும் ஜமாஅதே இஸ்லாமீயை பாதுகாப்பதேயாகும். இதற்காக அவர் செய்த பலமுயற்சிகளில் இக்கண்டுபிடிப்பும் ஒன்றாகும். முதலில் அவர் கூறுவதைக் கேளுங்கள்.
'மக்காவில் நபிக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பு 'இத்திபாஃ' எனும் பின்பற்றல்தான் 'தாஅத்' என்ற கட்டுப்பாடல்ல.
இந்த 'தாஅத்' திற்கும், 'இத்திபாஃ' இற்கும் வேறுபாடு உண்டா? 'இத்திபா?' வேதவெளிப்பாடான வஹிக்குச் சொந்தமானது. 'தாஅத்' தலைவருக்குச் சொந்தமானது.
இந்த வேறுபாடுகளில் சிலவற்றை பின்வரும் அல்குர்ஆன் வசனமும் அல்ஹதீஸும் விளக்குகின்றன.
'சத்தியம் அவர்களது மனோ இச்சையைப் பின்பற்றினால் வானமும். பூமியும் சீரழிந்து. அதில் உள்ளர்களும் சீரழிந்து விடுவார்கள்.' (23:71)
'நான் கொண்டு வந்ததை மனோ இச்சை பின்பற்றாதவரை உங்களில் எவரும் விசுவாசியாக முடியாது' ( )
தெளிவு :
முதலில் அறபு மொழியில் இவ்விரண்டு சொற்களுக்குமான பொருளைக் கவனியுங்கள். 'தாஅத்' என்றால் கட்டுப்படுதல். வழிப்படுதல் என்பது பொருளாகும். 'இத்திபாஃ' என்றால் பின்பற்றுதல் என்பது பொருளாகும். இதனை நீங்கள் மௌலவி ஹஜ்ஜுல் அக்பருடைய குறிப்பிலும் காணலாம்.
இதன் பின்னர் ';இத்திபாஃ' எனும் சொல்லை வஹிக்குத்தான் பயன்படுத்தப்படும். 'தாஅத்' எனும் வார்த்தை தலைவருக்காகத்தான் பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார். இந்த ரீதியில் அவருடைய எண்ணப்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது மக்காவாழ்வின் போது கூறக்கூடிய வஹியுடைய விடயங்களை 'இத்திபாஃ' தான் செய்ய வேண்டும். தலைவர் என்ற அந்தஸ்தில் வைத்து 'தாஅத்' (கட்டுப்பட) செய்யவேண்டிய தேவையில்லை எனவும் அவர்கூறுகின்றார். இது சரிதானா? குர்ஆன் ஹதீஸைக் கொண்டு ஆராய்வது எமது கடமையாகும்.
குர்ஆனும், ஹதீஸும் இது அப்பட்டமான தவறு என்பதைத் தெளிவாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இவருடைய இந்தக் கண்டுப்பிடிப்பு தவறு என்பதை நிரூபிப்பதற்கு நாம் 'இத்திபாஃ?' எனும் வார்த்தை வஹி அல்லாததைப் பின்பற்றுவதற்கு குர்ஆன், ஹதீஸில் பாவிக்கப்பட்டுள்ள ஆதாரத்தைக் காட்டவேண்டும். மேலும் வஹியைப் பின்பற்றுவதற்கு 'தாஅத்' எனும் வார்த்தை குர்ஆன், ஹதீஸில் பாவிக்கப்பட்டுள்ளதையும் நாம் எடுத்துக் காட்ட வேண்டும். இப்படிக் காட்டி விட்டால் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீர், தான் இருக்கும் அசத்தியத்தை உண்மைப்படுத்தியே தீரவேண்டும் என்பதற்காக மேற்கொண்ட இந்தக் கண்டுபிடிப்பு முயற்சியும் வெறும் வார்த்தை ஜாலமேயன்றி, சத்தியம் அல்ல என்பது யாவருக்கும் தெளிவாகிவிடும். இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீருடைய கண்டுபிடிப்பு வெறும் 'வார்த்தை ஜாலம்' என்பதை நிரூபிப்பதில் அவரே தந்த ஆதாரத்தைக் கொண்டு ஆரம்பிக்கின்றோம்.
1. தனது கண்டுபிடிப்பிற்கு அவர் ஆதாரமாகக் குறிப்பிட்டிருக்கும் 23:71 ஆம் வசனத்தில் 'இத்தபஅ' எனும் சொல்தான் பாவிக்கப்பட்டுள்ளது. அவருடைய கண்டுபிடிப்பின்படி இச்சொல் வஹியைப் பின் பற்றுவதற்கு மாத்திரம் பாவிக்கக் கூடியது. ஆனால் இங்கு மனோ இச்சையைப் பின்பற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை அந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை அவரது குறிப்பில் இருந்து வாசித்துக் கொள்ளுங்கள்.
2. 'எனது அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக விரைவீராக! நிச்சயமாக நீங்கள் பின்தொடரப் படக்கூடியோரே! என மூஸாவுக்கு நாம் வஹி மூலம் அறிவித்தோம்'. (26:52)
இதுவும் மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே இக்கலந்துரையாடவின்போது முன்வைத்த குர்ஆன் வசனமாகும். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களோடு இருந்த முஸ்லிம்களையும் பிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் பின்பற்றிச் செல்வதைக் குறிப்பதற்காக 'இத்திபாஃ' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். வஹியைப் பின்பற்றுவதற்கு மாத்திரம்தான் 'இத்திபாஃ' என்ற சொல் பயன்படுத்தப்படும் என்றிருக்குமானால் இந்த அல்குர்ஆனிய வசனத்தை மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் மாற்றி அமைக்க வேண்டி ஏற்படும். அப்படி இல்லையானால் தன்னுடைய கண்டுபிடிப்பு தவறு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்.
3. அல்லாஹ்வுடைய கிருபையும், அருளும் உங்கள்மீது இல்iலாதிருந்திருக்குமானால் (உங்களில்) சிலரை அன்றி நீங்கள் ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள். (4:82)
ஷைத்தானைப் பின்பற்றுவதைக் குறிப்பிடுவதற்குக் கூட அல்லாஹ் 'இத்திபாஃ' எனும் வார்த்தையைத்தான் பயன்படுத்தியுள்ளான்.
'நீங்கள் கவனிப்பதில்லையா?' (28:72)
இப்பேது 'தாஅத்' எனும் சொல் தலைவருக்கு அல்லாமல் வஹியைப் பின்பற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஆதாரங்களைக் கவனியுங்கள் :
01. '(நபியே!) நீர் கூறிவீராக! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். மேலும் (அவனுடைய) தூதருக்கம் வழிப்படுங்கள்' (24:54)
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதற்கு 'தாஅத்' என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அல்குர்ஆனிய வசனமும் மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் அவர்களால் கலந்துரையாடலின் போது பயன்படுத்தப்பட்ட வசனமேயாகும். (அவரது 26ம் ஆதாரத்தின் 6வது குறிப்பைப் பார்க்கவும்)
ஏனைய இடங்களில் குர்ஆன் வசனங்களுக்கும். ஹதீஸிற்கும் மாற்றுக் கருத்துக் கொடுப்பதுபோல் இங்கு கொடுக்க முடியாது. தவறை ஏற்றே ஆக வேண்டும். இல்லை என்றால் 'அல்லாஹ்தான் தலைவர்' எனக் கூறுவதற்கு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி துணியட்டும்.
02. 'விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். எந்த இடத்தில் வஹியைப் பின்பற்றுவதற்கு அல்லாஹ் 'தாஅத்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். 'தாஅத்' என்ற சொல் தலைவருக்குக் கட்டுப்படுவதைக் குறிக்கத்தான் பயன்படுத்தப்படும் என்பதில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீர் அடம்பிடித்தால் இந்த அல்குர்ஆனிய வசத்தையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை அவருக்கு ஏறபடும். வஹியைப் பின்பற்றுவதற்கு 'தாஅத்' எனும் பயன்படுத்தப்பட்டுள்ள மேலதிகமான வசனங்கள் மேலும் சிலதை பார்க்க விரும்புவோர் 3:132, 5:92, 8:1. போன்ற வசனங்களைப் பார்க்கவும்.
ஆகவே 'தாஅத்' என்ற சொல் தலைவருக்குரியது 'இத்திபாஃ' எனும் சொல் வஹிக்குச் சொந்தமானது என்பது வெறும் கண்டுபிடிப்பேயன்றி ஆதாரங்கொண்டு நிரூபிக்கப்பட்டதல்ல என்பது வாசகர்கள் அனைவருக்கும் தெளிவாகியிருக்கும். எனவே இத்தகையதொரு கண்டுபிடிப்பின் மூலம் 'ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது மக்கா வாழ்வில் தலைவருக்கான கட்டுப்பாடு இருக்கவில்லை' எனும் சுய கருத்தை நிரூபித்து தாம் இருக்கும் பிரிவுகளை சரிகாண முனைந்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிகின்றது.
தத்தமக்கென ஒவ்வோர் கொள்கையை உருவாக்கிக் கொண்டு அதனை சரிகாண்பதற்காக குர்ஆனையும், ஹதீஸையும் எத்தனை தான் மாற்ற முயற்சித்தாலும் அது சாத்தியமானதுமல்ல, வெற்றிக்கு இட்டுச் செல்லக் கூடியதுமல்ல. இதற்கு நேர்மாறாக குர்ஆனிற்கும், ஹதீஸிற்கும் ஏற்ப ஒவ்வொரு மனிதனும் தனது நம்பிக்கைகளையும், செயல்பாடுகளையும் மாற்றி அமைத்துக் கொள்வதில்தான் கண்ணியமும், நிரந்தரவெற்றியும் கிட்டமுடியும். அந்த வெற்றியின்பால் 'ஜமாஅதுல் முஸ்லிமீன்' உங்களனைவரையும் அழைக்கின்றது. இனியாவது இந்த சத்திய அழைப்பை தூயமனதோடு சிந்திக்கமாட்டீர்களா? தெளிவில்லாத விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நெருங்க மாட்டீர்களா? சத்தியத்தைத் தேடக்கூடிய ஒவ்வொரு வருக்கும் 'ஜமாஅதுல் முஸ்லிமீனின்' அழைப்பு தெளிவாக எத்திவைக்கப்பட வேண்டும் எனும் எமது முயற்சியில் துணை நிற்க அல்லாஹ்வையே அழைக்கின்றோம்.
'பொறுப்பேற்பதற்கு அல்லாஹ் போதுமானவன் உதவி செய்வதற்கும் (அந்த) அல்லாஹ்வே போதுமானவன். (4:45)
3.முரண்பாடுகள்!
முரண்பாடுகள் என்பது சத்தியத்தில் இல்லாத ஒன்று, அசத்தியத்தில் என்போதுமே காணப்படக் கூடிய ஒன்று. எனவேதான் அல்லாஹ்வும் அல்குர்ஆனின் தூய்மைக்கு சான்றாக அதில் முரண்பாடு கிடையாது (4:82) என்பதை ஆதாரமாக முன்வைக்கின்றான். நரகின்பால் அழைக்கக் கூடிய பிரிவுகளில் ஒன்றாகிய இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தான் இருக்கக்கூடிய அசத்தியத்தை நிருபிப்பதற்காக அதனது அமீர் முன்வைத்த ஆதாரங்களை இதுவரைக்கும் ஒவ்வொன்றா எடுத்து குர்ஆன், ஹதீஸ் ஒளியில் அவற்றைத் தெளிவு படுத்தினோம்.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் நம்பிக்கைகளும், நடைமுறைகளும் அசத்தியம் என்பதை அதனது தலைவரது முரண்பாடுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. அம்முரண்பாடுகளில் ஒருசிலதை அசத்தியம் அடையாளம் காணப்படுவதற்காக இங்கு முன்வைக்கின்றோம்.
முரண்பாடு : 01.
முப்பரிமாணம்
யு. இன்றிருப்பதுபோல் அல்லாஹ்வையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் ஏற்றவர்கள் ஒவ்வொருதலைமைத்துவத்தை ஏற்படுத்திக்கொண்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது மக்கா வாழ்வின்போது பிரிந்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா? என கேட்கப்பட்ட போது, அவர் கூறியதாவது:
'பிரிந்திருந்தார்கள் என்பதுதான் உண்மை'
டீ. 'இன்று பிரிவினைகள் இருப்பதுபோல் ஸஹாபாக்கள் கூட்டம் கூட்டமாக தத்தமக்கு ஒவ்வொரு தலைவரை நியமித்துக் கொண்டு பிரிந்தார்கள் என்பது இல்லைதான். ஆனால் தலைமைத்துவம் அவசரமாக உருவாக்கப்பட்டு 'ஜமாஅதுல் முஸ்லிமீன்' உலகில் தோற்று விக்கப்படாமல் இருந்திருந்தால் பிரிவிpனை வருவதற்கான அத்தனை சூழலும் மக்காவில் இருந்தது'
ஊ. 'மக்காவில் தனி மனிதர்களும் இஸ்லாமும்தான் இருந்தது, பிரிய முடியவில்லை. ஏனெனில் ஜமாஅத் இருக்கவில்லை.'
முரண்பாடு : 02.
யு. 'மக்காவில் பொறுப்பு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்மீது மாத்திரமே இருந்தது. எனவேதான் தாயிபிற்குச் செல்லும்போது தனியாகவே செல்கிறார்கள்.' 'மக்காவில் தொழுகைக்கே அழைக்கவில்லை என்றால் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கு எப்படி அழைப்பது?'
டீ. இலங்கை ஜமாஅதே இஸ்லாமி கூட என்ன கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றது என்றால் 'ஜமாஅதுல் முஸ்லிமீனை' உருவாக்க நாங்கள் புறப்பட்டிருக்கின்றோம். உருவாக்குவோம். அதிலே முஸ்லிம்களே! நீங்கள் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் ஒன்றாக சேர்ந்து அதனை உருவாக்குவோம் என்பதுதான்.'
குறிப்பு :
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களது மக்கா வாழ்வின்போது 'ஹிலாதுல் முஸ்லிமீனை' தோற்றுவிப்பதற்காக எவரையுமே துணைக்கு அழைக்கவில்லை என வாதிக்கும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அதனது நம்பிக்கைக்கு நேர்முரணாக அந்தச் செயலுக்காக பிறரை அழைத்து. தெளிவான முரண்பாட்டில் ஆகிவிடுகின்றது.
முரண்பாடு : 03
யு. 'மக்காவில் ஸக்காத் கடமையாக்கப்பட்டதாகவோ, கொடுத்ததாகவோ எங்கும் நாம் ஆதாரம் காணமுடியாது.'
டீ. 'மார்க்கம் என்ற வகையில்; மக்காவின் ஆரம்ப பாலப்பகுதியில் ஸக்காத் கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.'
இறுதியாக...
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் நோக்கம் அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெறுவதாகத்தான் இருந்தால் ஜமாஅதுல் முஸ்லிமீன் சத்தியத்தை ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளது. இதன் துணையோடு அவர்கள் தங்களது கொள்கையை மீள்பரிசீலனை செய்யட்டும். இதற்கும் மேலாக 'தாம் இருக்கும் பிரிவும் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படக்கூடியது' எனும் முடிவில் இருப்பார்களானால் அதற்கான தெளிவான சான்றுகளுடன் அதனை நிரூபிக்கப்பட்டும். ஆதாரங்கள் மூலமாக 'பிரிவுகளும் இஸ்லாம்' என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் ஜமாஅதுல் முஸ்லிமீன் விடுக்கும் அழைப்பிற்குப் பதிலளிக்கட்டும். தங்களது கொள்கையை அத்தகைய பிரிவுகள் நரகையே சென்றடையும் என்பதில் எவ்வாறு சந்தேகம் எழ முடியும்?
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தனது வாத்தில் அடம்பிடிக்குமானால் குர்ஆனிற்கும் ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய அவ்வாதத்தின் ஒரு சில விபரீதங்களைக் கேள்வி வடிவில் இங்கு முன்வைக்கின்றோம். முரண்பாடில்லாத பதிலை அவர்ககளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
1. 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நீதிபதியாக – தீர்ப்பு வழங்கக் கூடியவராக சித்தரிக்கும் வசனங்கள் அனைத்தும் மதீனா வசனங்களே' எனும் உங்களது வாதத்தில் நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் காதியானிகள் உட்பட பல பிரிவினர்களை 'அவர்கள் முஸ்லிம்களல்லர்' எனத் தீர்ப்பு வழங்கும் உரிமை. ஆட்சியதிகாரம் இல்லாத உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
2. 'காதியானிகள்' எனும் பிரிவினரை 'காபிர்கள்' எனத் தீர்ப்பு வழங்கிய நீங்கள், அதற்காகப் பயன்படுத்திய குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும் மதீனாவில் கூறப்பட்டவை என்பது தெரியாமல் அவற்றைப் பயன்படுத்தினீர்களா? அல்லது உங்களுக்கு அவை அச்சந்தர்ப்பத்தில் தேவை என்பதால் பயன்படுத்தினீர்களா?
3. போதையூட்டக் கூடியவை இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டு பல வருடங்கள் கழிந்ததன் பின்னரேயே முற்றாகத் தடை செய்யப்பட்டது. இன்று உலகில் இஸ்லாமி ஆட்சியே கிடையாது என்பதை 'ஜமாஅதுல் முஸ்லிமீன் கிடையாது' எனும் வார்த்தையைக் கொண்டு கூறினீர்கள். எனவே உங்களுடைய விதிப்படி இன்று உலகில் போதை வஸ்துக்களைப் பாவிப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை என ஏற்கவேண்டி வரும். இதுதான் உங்களுடைய தீர்ப்பா? அல்லது இந்த இடத்தில் மதீனாவிலே இறங்கிய சட்டத்தையும் பின்பற்ற வேண்டும் என்று கண்டுபிடிப்பு மாற்றப்படுமா? இப்படிப் பார்க்கும்போது ஹனபி மத்ஹபிலே 'குப்ர் நாட்டிலே காபிர்களுக்கு பன்றி இறைச்சி விற்கலாம். காபிர்களிடமிருந்து வட்டி பெறலாம்' என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பது உங்களது கருத்தைவிட ஓரளவு சிறந்தது என்றுதான் கூறவேண்டியிருக்கின்றது.
4. உங்களது விதிப்படி உங்களையும் ஸஹாபாக்களையும் ஒப்பிட்டால் நீங்கள்தான் மேலானவர்கள். ஏனெனில் 'கூட்டுத் தொழுகை, ஸக்காத் போன்றவை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும், அன்னாரது தோழர்களுக்கும் மக்காவில் கடமையாக்கப்பட்டும் அவர்கள் அவற்றைச் செயல்படுத்த வில்லை' என வாதிக்கும் நீங்கள். 'குப்ர்' நாட்டிலே இருந்தும் அவற்றைச் செயல்படுத்துகின்றீர்களே...?
5. 'குப்ர்' நாட்டில் வாழும் நீங்கள் ஸக்காத் பற்றிய சட்டதிட்டங்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு, கூட்டாக ஸக்காத் வழங்கத் தூண்டுகிறீர்கள். அதேநேரம் 'குப்ர்' நாட்டில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்கூட இதனைச் செய்யவில்லை என வாதிக்கிறீர்கள். எனவே ஸக்காத்தைச் சேகரித்துக் கொடுக்க வேண்டும் என நீங்கள் கூறுவதில் சந்தேகம் ஏற்படுகின்றது. உங்களது செயல் சரிதானா...?
பணிவான, அன்பான, கவலையுடன்கூடிய எமது அழைப்பு 'நடந்த தவறுகளை உலக கௌரவத்திற்காக சரியென நிரூபிக்க முயற்சிக்காமல், மறுமையில் கிடைக்கவிருக்கும் நிலையான வெற்றியையும், கண்ணியத்தையும் மனதில் கொண்டு சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இரு உலகிலும் வெற்றியும், கண்ணியமும் கிடைக்கும்' என்பதேயாகும்.