...

கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 08

கேள்வி : 2 1
ரஸூலுழ்ழாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
ஹலால் தெளிவானதாகும். ஹராமும் தெளிவானதாகும். அந்த இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான (சில) விடயங்களும் உள்ளன. (மற்றொரு அறிவிப்பின்படி: மனிதர்களில் அதிகமானவர்கள் அதனை அறியமாட்டார்கள்.) யார் பாவத்தினின்றும் தனக்கு சந்தேக மானதை விட்டு விடுகின்றாரோ (அவர் தனக்குத்) தெளிவாகிவிட்ட (பாவத்)தை விட்டும் மிகத் தூரமாகிவிடுவார். யார் பாவத்தினின்றும் தான் சந்தேகிக்கக் கூடியதை செய்வதற்குத் துணிகின்றாரோ (அவர் அவருக்குத்) தெளிவாகிவிட்ட (பாவத்)தையும் செய்வதற்கு நெருக்க மாகவே இருப்பார். பாவங்கள் (என்பது) அல்லாஹ்வின் பாதுகாப்பு வலயமாகும். யார் அந்தப் பாதுகாப்பு வலயத்தைச் சூழ உல்லாசமாக சுற்றித் திரிகின்றானோ (அவன்) அதிலே நுழைவதற்கு மிக நெருக்கமாகவே இருக்கின்றான்.
( ஸஹீஹுல் புஹாரி கி. புயூஃ 0 2 )

ஜமாஅதுல் முஸ்லிமீன் பற்றி நாம் அறிஞர்கள் பலரிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்களில் சிலர் மேற்படி ஹதீஸை மேற்கோள் காட்டி ஜமாஅதுல் முஸ்லிமீன் பற்றி சந்தேகம் இருப்பதால் அதனை விட்டு ஒதுங்கிவிடுவதே முஸ்லிம்களின் கடமை என எமக்குக் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது சரிதானா? மேற்படி ஹதீஸின் உண்மையான விளக்கம் என்ன?

கேள்வி : 2 2
ஒவ்வொரு மனிதனும் இப்பூமியில் பிறப்பதற்கு முன்னர் ஆலமுல் அர்வாஹிலே வைத்து அல்லாஹ்விடம் பைஅத் செய்துள் ளனர். அவ்வாறு இருக்கும்போது சாதாரண மனிதர்களிடம் ஏன் மீண்டும் நாம் இந்தப் பூமியில் பைஅத் செய்ய வேண்டும்?


கேள்வி : 2 3
சில ஸஹாபிய்யாப் பெண்மணிகள் யூதப் பெண்களிடமிருந்து கூட அவசியமான விடயங்களைக் கற்றுள்ளார்கள். ஆனால் நீங்கள் உங்களது சிறார்களைப் பாடசாலைகளுக்கோ அல்லது மத்ரஸாக் களுக்கோ அனுப்புவதில்லை. இந்த நிலை நீடிக்குமானால் நாளைய சமுதாயத்தின் அங்கத்தவர்களாக இருக்கப்போகும் இன்றைய சிறுவர்கள் தங்களுக்குத் தேவையான உலகக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும் எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள்?








கேள்வி : 2 1

ரஸூலுழ்ழாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
ஹலால் தெளிவானதாகும். ஹராமும் தெளிவானதாகும். அந்த இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான (சில) விடயங்களும் உள்ளன. (மற்றொரு அறிவிப்பின்படி: மனிதர்களில் அதிகமானவர்கள் அதனை அறியமாட்டார்கள்.) யார் பாவத்தினின்றும் தனக்கு சந்தேக மானதை விட்டு விடுகின்றாரோ (அவர் தனக்குத்) தெளிவாகிவிட்ட (பாவத்)தை விட்டும் மிகத் தூரமாகிவிடுவார். யார் பாவத்தினின்றும் தான் சந்தேகிக்கக் கூடியதை செய்வதற்குத் துணிகின்றாரோ (அவர் அவருக்குத்) தெளிவாகிவிட்ட (பாவத்)தையும் செய்வதற்கு நெருக்க மாகவே இருப்பார். பாவங்கள் (என்பது) அல்லாஹ்வின் பாதுகாப்பு வலயமாகும். யார் அந்தப் பாதுகாப்பு வலயத்தைச் சூழ உல்லாசமாக சுற்றித் திரிகின்றானோ (அவன்) அதிலே நுழைவதற்கு மிக நெருக்கமாகவே இருக்கின்றான்.
( ஸஹீஹுல் புஹாரி கி. புயூஃ 0 2 )

ஜமாஅதுல் முஸ்லிமீன் பற்றி நாம் அறிஞர்கள் பலரிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்களில் சிலர் மேற்படி ஹதீஸை மேற்கோள் காட்டி ஜமாஅதுல் முஸ்லிமீன் பற்றி சந்தேகம் இருப்பதால் அதனை விட்டு ஒதுங்கிவிடுவதே முஸ்லிம்களின் கடமை என எமக்குக் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது சரிதானா? மேற்படி ஹதீஸின் உண்மையான விளக்கம் என்ன?

பதில் :
நரகின்பால் அழைக்கும் பிரிவுகள் மக்களை வழிகெடுப் பதற்குக் கையாளும் தந்திரங்களில் ஒன்று ஆதாரங்களைத் “தஹ்ரீப்” செய்வதாகும். தஹ்ரீப் என்றால் சம்பந்தமே இல்லாத ஆதாரத்தை முன்வைத்து தங்களது கூற்றை நிரூபிப்பதாகும். இது யூதர்கள் கையாண்ட வழிமுறை என அல்குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ் இறக்கிவைத்த வஹியை மாத்திரம் பின்பற்றுமாறு ஜமாஅதுல் முஸ்லிமீன் பிரச்சாரம் செய்கின்றது. இது முதலாவது தூதர் நூஹ் (அலை) முதல் இறுதித்தூதர் வரையிலான அத்தனை தூதர்களினாலும் விடுக்கப்பட்ட அழைப்பாகும். ஸாலிஹ் (அலை) இந்த அழைப்பை முன்வைத்தபோது அதனை நிராகரித்த ஸமூத் கூட்டத்தினர் பெரும் சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சத்தியத்தை மறுப்பதற்குக் கூறிய காரணத்தைப் பாருங்கள்:-

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
“ஸாலிஹே! இதற்கு முன்னர் (நீர்) எமக்கு மத்தியில் எதிர் பார்ப்புக்குரியவராக இருந்தீர். (இப்போது நீர்) எங்களது முதாதையர் வழிபடுவதையே (நாம்) வழிபடுவதனை விட்டும் எம்மைத் தடுக்கிறீரா? நிச்சயமாக எதன்பால் எம்மை (நீர்) அழைக்கின்றீரோ (அதிலே) நாம் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றோம்.“ எனக்கூறினார்கள்.
( 1 1 : 6 2 )

அல்லாஹ் இறக்கியதில் சந்தேகம் உள்ளது எனக்கூறி அன்று ஸமூத் கூட்டத்தினர் நேர்வழியை நிராகரித்தனர். அதே காரணத்தைக் கூறி நீங்கள் குறிப்பிடும் உலமாக்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் முன்வைக்கும் சத்தியத்தை நிராகரிக்கும்படி மக்களுக்கு வழிகாட்டுகின்றனர். அப்படியானால் அன்று ஸமூத் கூட்டத்தினர் ஸாலிஹ் நபியை நிராகரித்ததையும் இத்தகைய உலமாக்கள் சரிகாண்பார்களா .............? நஊது பில்லாஹி மின்ஹா.

அல்லாஹ் இறக்கிய தீனிலே சந்தேகப்படுவதனை சரி காண்பதற்காக மேற்படி ஹதீஸ் கூறப்படவில்லை. இதனை அந்த ஹதீஸைத் தெளிவாகப் பார்த்தால் நாம் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். அந்த ஹதீஸில் ஹராமான விடயங்களில் மிகவும் பேணுதலாக இருப்பது பற்றிக் கூறப்படுகின்றது. அதாவது ஒரு முஸ்லிம் பாவம் எனத் தெரிந்தவற்றை மட்டுமல்ல. பாவமாக இருக்குமோ என அவன் சந்தேகப்படுபவற்றைக்கூட அவன் தவிர்ந்து நடக்கப் பழக வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இந்த ஹதீஸில் “யார் பாவத்தினின்றும் தனக்கு சந்தேகமானதை விட்டு விடுகின்றாரோ (அவர் அவருக்குப் பாவம் எனத்) தெளி வாகியதை விட்டும் மிகத் தூரமாகி விடுவார்.” எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு விடயம் இஸ்லாத்திலே தடைசெய்யப்பட்டதா? அல்லது ஆகுமாக்கப்பட்டதா? என்பதில் ஒரு சிலருக்கு சந்தேகம் தோன்றும் சில விடயங்களும் உள்ளன என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் தெளிவாகச் சொல்லப்பட்ட விடயங்களையும் சந்தேகம் எனக்கூறி சத்தியத்தை மறுப்பதற்கான ஆதாரமாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸைச் சொல்லவில்லை.

குர்ஆனையும், ஹதீஸையும் பயன்படுத்தி மக்களை நரகின் பால் அழைக்கும் இந்த அழைப்பாளர்களைப் பற்றித்தான் ரஸூலுல்லாஹி (ஸல்) எச்சரித்தார்கள். இவர்களது அழைப்பை ஏற்றுக் கொள்வோரை இவர்கள் நரகிலே எறிந்துவிடுவார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) தெளிவாகக் கூறிச் சென்றார்கள்.

அல்குர்ஆன் பற்றி அல்லாஹ் “அதிலே சந்தேகம் கிடையாது. (அல்லாஹ்வை) அஞ்சக்கூடியோரை நேர்வழியில் செலுத்தக் கூடியதாக (அது) இருக்கின்றது.” (0 2 : 0 2) என்பதாகக் கூறுகின்றான். அல்குர்ஆனிலே சந்தேகம் கொண்டு அதனை நம்ப மறுக்கும் நிராகரிப்பாளர்களில் எவராவது “அல்லாஹ் இறக்கிய அல்குர்ஆன் இதுதானா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே நான் சந்தேகமானதை விட்டுவிட வேண்டும் என உங்களது நபியே கூறியுள்ளதனால் அல்குர்ஆனை நான் விட்டுவிட்டேன்” எனக் கூறினால் நரகின்பால் அழைக்கும் இத்தகைய உலமாக்கள் அத்த கையவர்களுக்கு என்னதான் பதில் கூற முடியும்.............? அல் குர்ஆனிலே இருபத்தியிரண்டு இடங்களில் இலக்கணப் பிழைகள் உள்ளதாக தற்காலத்தில் வாழும் மேற்கத்தியவாதிகள் கூறி வருகின்றனர். எமது சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருசிலராகிய அஹ்லுல் குர்ஆன் எனும் பிரிவினர் ஹதீஸ்களில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகக் கூறியே ஹதீஸ்களை நிராகரிக்கின்றனர். மேற்படி ஹதீஸ் கூறுகின்ற உண்மையான விளக்கத்தை இப்போது நாம் சுருக்கமாக உங்களுக்குத் தருகின்றோம். நேர்வழி எது என்பதில் சந்தேகம் இருக்கும் என அந்த ஹதீஸ் ஒருபோதும் கூறவில்லை. மாறாக நேர்வழியை ஏற்றுக்கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களில் ஆகுமானவற்றையும், தடைசெய்யப்பட்ட வற்றையும் தெளிவாகக் கூறிய அல்லாஹ் அவற்றில் ஒருசில விடயங்கள் பற்றிய தீர்ப்பை மனிதர்களில் அறிஞர்கள் மாத்திரம் அறியக்கூடியதாக நுணுக்கமாக்கி வைத்துள்ளான். ஏனையவர்களுக்கு அவை ஹராமானதா? அல்லது ஹலாலானதா? என்பதிலே சந்தேகம் இருந்தாலும் அவற்றின் சரியான முடிவுகளை அறிஞர்கள் அறிவார்கள். எனவேதான் நீங்கள் அறியாதிருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள் என அல்குர்ஆன் கூறுகின்றது. அறிஞர்களிடம் கேட்டதன் பின்னர் அவர்கள் ஹலால் அல்லது ஹராம் எனக் கூறிய ஏதாவது ஒன்று அதற்கு மாற்றமாக இருக்குமோ எனப் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் யாருக்கு அந்த சந்தேகம் ஏற்படுகின்றதோ அவர் அந்த இரு சந்தர்ப்பங்களிலும் அதனைத் தவிர்ந்து கொள்வது அவரது தீனுக்கும், அவரது கண்ணியத்திற்கும் பாதுகாப்பானதாகும். இதுதான் மேற்படி ஹதீஸ் கூறக்கூடிய உண்மையாகும்.

நேர்வழி எது என்பதில் அல்லாஹ் ஒரு போதும் சந்தேகத்திற்கு இடம்வைக்கவில்லை. இதுபற்றி ரஸூலுல்லாஹி (ஸல்) கூறும்போது எவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளார்கள் எனக் கவனியுங்கள்:-

பளிச்சிடும் வெண்மையிலே உங்களை (நான்) விட்டுள்ளேன். அதனது இரவுகளும் அதனது பகலைப் போறதாகும். அழிந்து போகின்றவனைத் தவிர (வேறு எவரும்) எனக்குப் பிறகு அதனை விட்டும் தடம்புரண்டு செல்ல மாட்டான். ...........
(மு. அஹ்மத் அறி: இர்பாழ் பின் ஸாரியஹ் - ஸஹீஹ்)

ஜமாஅதுல் முஸ்லிமீனிலே சந்தேகம் இருப்பதனால் அதனை முஸ்லிம்கள் தவிர்த்துவிட வேண்டும் எனக் கூறுவது போதிய இஸ்லாமிய அறிவு இல்லாதவர்களின் தவறான வழிகாட்டல் என்பது உங்களுக்குத் தெளிவாகிவிட்டதல்லவா............?

கேள்வி : 2 2
ஒவ்வொரு மனிதனும் இப்பூமியில் பிறப்பதற்கு முன்னர் ஆலமுல் அர்வாஹிலே வைத்து அல்லாஹ்விடம் பைஅத் செய்துள் ளனர். அவ்வாறு இருக்கும்போது சாதாரண மனிதர்களிடம் ஏன் மீண்டும் நாம் இந்தப் பூமியில் பைஅத் செய்ய வேண்டும்?

பதில் :
ஆலமுல் அர்வாஹில் மனிதர்களிடம் பைஅத் எடுத்த அதே அல்லாஹ்தான் அவனது தூதர் மூலம் முஸ்லிம்களின் இமாமுக்கு பைஅத் செய்யும்படி கட்டளை பிறப்பித்துள்ளான். ஆலமுல் அர்வாஹிலே அல்லாஹ்விடம் செய்யப்பட்ட பைஅத் சுவனம் செல்வதற்குப் போதுமானது என அவன் கருதுவதாக இருந்தால் அடியார்களில் ஒருவரிடம் ஏனையவர்கள் பைஅத் செய்ய வேண்டும் என அவன் ஏன் சட்டம் இயற்றியுள்ளான்.................?

ஆலமுல் அர்வாஹில் செய்த பைஅத் முஸ்லிமாகுவதற்குரிய பைஅத் என்பதாக நீங்கள் கருதினால் அந்த பைஅத்தை இந்தப் பூமியில் பிறந்த, பிறக்கப்போகின்ற அத்தனை மனிதர்களும் செய்தி ருக்கின்றனர். அதாவது யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், நாஸ்திகவாதிகள் உட்பட ஒவ்வொருவரும் அந்த பைஅத்தைச் செய்திருக்கின்றார்கள். எனவே அந்த பைஅத்தைச் செய்ததனால் சுவனம் சென்றுவிட முடியும் என்றிருந்தால் மேலே குறிப்பிடப்பட்ட அனைவரும் சுவனம் செல்வார்கள் என்பதை ஏற்க வேண்டும். அதனை நீங்கள் ஏற்பதற்குத் தயாரா.......?

உண்மை என்னவெனில் அல்லாஹ்தான் படைப்பினங்களது ரப் என்பதை ஆலமுல் அர்வாஹிலே ஏற்றுக்கொண்ட மனிதர்களில் உண்மையானவர்கள் உலகில் அந்த ரப்பினது கொள்கையை ஏற்று இஸ்லாத்திற்காக பைஅத் செய்வார்கள். ஏனையவர்கள் நன்றி மறந்து ஜாஹிலிய்யத்தில் மரணித்து நரகையடைவார்கள்.

கேள்வி : 2 3
சில ஸஹாபிய்யாப் பெண்மணிகள் யூதப் பெண்களிடமிருந்து கூட அவசியமான விடயங்களைக் கற்றுள்ளார்கள். ஆனால் நீங்கள் உங்களது சிறார்களைப் பாடசாலைகளுக்கோ அல்லது மத்ரஸாக் களுக்கோ அனுப்புவதில்லை. இந்த நிலை நீடிக்குமானால் நாளைய சமுதாயத்தின் அங்கத்தவர்களாக இருக்கப்போகும் இன்றைய சிறுவர்கள் தங்களுக்குத் தேவையான உலகக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும் எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள்?

பதில் :
அல்லாஹ்வின் அருளினால் எமது பிள்ளைகள் இஸ்லாமியக் கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக நாம் இலங்கையில் எமது தலைமையகம் அமைந்துள்ள ஏத்தாலை எனும் கிராமத்தில் ஒரு இஸ்லாமியக் கல்லூரியை நிறுவியுள்ளோம். அதன் மூலம் அல்லாஹ் இறக்கிய வஹியைத் தெளிவாக விளங்கி, அதனைப் பின்பற்றி நடப்பதுடன் அதனை முழு மனித சமுதாயத்திற்கும் பிரச்சாரம் செய்யும் அறிஞர்களை உருவாக்குவது எமது நோக்கமாகும். இவ்வாறு தூய்மையான இஸ்லாத்தைப் போதிக்கும் ஒரு இஸ்லாமியக் கல்லூரியை எமக்கென நாமே உருவாக்கியுள்ளதால் இஸ்லாத்தின் பெயரால் அல்லாஹ் இறக்கிவைத்துள்ள சட்டங்களுக்கு நேர்முரணான சட்டங்களைப் போதிக்கும் மத்ரஸாக்களுக்கு எமது பிள்ளைகளை அனுபுவதனை விட்டும் அல்லாஹ் எம்மை பாதுகாத்துள்ளான்.

உலகக் கல்வியைப் பொறுத்த மட்டில் இஸ்லாமிய வரம்புகளைப் பேணி அதனைப் பெற்றுக்கொள்வதனை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இஸ்லாம் வாழ்வின் எல்லாத் துறைகளையும் நெறிப்படுத்தி, வழிகாட்டுகின்ற ஒரு முழுமையான வழி காட்டல் என்பது பொதுவாக அறியப்பட்ட ஓர் உண்மையாகும். அதற்கிணங்க இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு என தனியான பாடசா லைகளை ஒதுக்கித் தந்துள்ளது. முஸ்லிம்களுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் பாடசாலைகள் உலகக் கல்வியை மாத்திரம் கற்றவர்களால் நிர்வகிக்கப்படுகின்றது. அவர்கள் இஸ்லாமிய வரம்புகளைத் தெளிவாக அறிந்தவர்களாகவோ அல்லது அதனை அறிந்தவர்களின் வழிகாட்டுததலைப் பெற்று நிர்வாகத்தை நடாத்துபவர்களாகவோ இல்லாததன் காரணமாக இஸ்லாமிய வரம்புகளுக்கு உட்பட்டு உலகக் கல்வியைப் போதிக்கும் பாடசாலைகள் என்பது கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையிலேயே இருக்கின்றது. இஸ்லாமிய அறிவு இல்லாதவர்களின் வழிநடாத்தலில் நடைபெறும் எமது பாடசாலைகளில் தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாத்துக்கு முரணான எத்தனையோ அம்சங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றன.

இருந்தாலும் முஸ்லிம்கள் உலகக் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஆகுமாக்கப்பட்ட வழிகளில் உலகக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக முடியுமான முயற்சிகளை மேற்கொண்டே வருகின்றோம். அதேநேரம் உலகக் கல்வியைப்ட பெறுவதற்காக மிகப் பெறுமதியான மறுமை வாழ்வைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள் என மக்களுக்கு உபதேசிக்கின்றோம்.

முஸ்லிம்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு முரணாக நடக்கும் விடயங்களைத் தவிர்த்து, எமது சிறார்களுக்கு உலகக் கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய முழு முயற்சியையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். முடியுமான இடங்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் உலகக் கல்வியைப் போதிப்பதற்கும் எமக்கான தனியான பாடசாலைகளை அமைத்து, நிர்வகித்துக் கொண்டிருக்கின்றோம்.

எனவே உலகக் கல்வி உட்பட, இஸ்லாத்தைப் பற்றிய அறிவை எம்மால் முடியுமானவரை எமது சிறார்களுக்கு நாம் வழங்கி வருகின்றோம். அதில் நாம் குறை செய்கின்றோம் என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து உலகக் கல்வியைக் கற்பதனை நாம் தவறாகப் பார்ப்பதும் இல்லை.