கேள்வி : 2 4
உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை சரியாகப் பின்பற்றுவதாகக் கூறும் நீங்கள் எல்லோருக்கும் ஸலாம் சொல்வதில்லை. அது ஏன்...............?
கேள்வி : 2 5
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
விபச்சாரகன் விபச்சாரம் புரியும்போது விசுவாசியாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் (அவன்) மதுபானம் அருந்தும்போது விசுவாசியாக இருந்து கொண்டு (அவன்) மதுபானம் அருந்துவதில்லை. மனிதர்கள் தனது பக்கம் பார்வையை உயர்த்திடப் பகிரங்கக் கொள்ளையில் ஈடுபடுபவன் விசுவாசியாக இருந்து கொண்டு அதனைக் கொள்ளையிடுவதில்லை.
(ஸஹீஹுல் புஹாரி கி. மழாலிம் 31)
விசுவாசியாக இருந்தவர் விபச்சாரம் புரிதல், மதுபானம் அருந்துதல், கொள்ளையடித்தல் போன்றவற்றில் ஈடுபடும்போது அவர் விசுவாசியாக இருப்பதில்லை என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மேற்படி தவறுகளைச் செய்பவர்கள் அந்தத் தவறைச் செய்து முடித்ததன் பின்னர் அவர்கள் விசு வாசிகளாக இருப்பார்கள் என்பதனை நாம் விளங்கிக்கொள்ள முடியும். விசுவாசியாக இருந்தவர்கள் விசுவாசத்தை இழந்து மீண்டும் விசுவாசிகளாக மாறும்போது அதற்கு அவர்கள் பைஅத் செய்ய வில்லையே.........? விசுவாசியாக மாறுவதற்கு பைஅத் செய்வது அவசியம் எனக் கூறும் உங்களது கூற்று தவறு என்பதனை இந்த ஹதீஸ் தெளிவாக நிரூபிக்கின்றதே..........?
கேள்வி : 2 6
எமது சமூகத்தில் உள்ளவர்கள் கூட்டாகத் தொழும்போது அவர்களுடன் நீங்கள் சேர்வதில்லை. மாறாக அனேகமான நேரங் களில் தனியாகவே தொழுகின்றீர்கள். அவர்களது தொழுகையைத் தவறு என்பதாக நீங்கள் கருதினாலும் கூட்டுத் தொழுகையின் நன்மையை அடைவதற்காக அவர்களுடன் நீங்கள் சேர்ந்து தொழுவதே சரியான நடைமுறை. ஏனெனில் தொழுகை நடாத்துவோரது தவறுகள் அவர்களையே சாரும் என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) கூறியிருக்க : நீங்கள் இவ்வாறு ஒதுங்குவது தவறல்லவா...?
கேள்வி : 2 4
உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை சரியாகப் பின்பற்றுவதாகக் கூறும் நீங்கள் எல்லோருக்கும் ஸலாம் சொல்வதில்லை. அது ஏன்...............?
பதில் :
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது “உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பிக் கொள்ளுங்கள்!” எனும் கட்டளையை ஜமா அதுல் முஸ்லிமீன் அப்படியே செயல்படுத்துகின்றது. முஸ்லிம்களைச் சந்திக்கும்போது நாம் ஸலாம் கூறுகின்றோம். அவர்களை விட்டுப் பிரிந்து செல்லும்போதும் ஸலாம் சொல்லுகின்றோம். ஸலாம் சொல்லாமல் கதைக்கும் முஸ்லிம்களுக்குப் பதிலே கூற மாட்டோம். சிறுவர்களுக்கும் ஸலாம் சொல்லுகின்றோம். அந்த சிறுவர்களை ஸலாம் கூறுவதற்குப் பயிற்றுவிக்கின்றோம். இப்படி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது கட்டளையை முடியுமான அளவு அல்லாஹ்வின் உதவியால் நாம் செயல்படுத்திக்கொண்டே இருக்கின்றோம்.
ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு நாம் ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காததற்குக் காரணம் ரஸூலுல்லாஹி ச அவர்களது தடைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்வது கடமை என நாம் நம்புவதாகும். அன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமாக இருந்த ரஸூலுல்லாஹி ச தங்களுடன் சேர்ந்திருக்காத எவருக்கும் ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்க வில்லை. மாறாக அதனைத் தடைசெய்தார்கள். அந்த ரஸூலுல்லாஹி ச அவர்களில் எமக்கு அழகிய முன்மாதிரி உள்ளதாக அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான். எனவே நாமும் அவர்களைப் பின்பற்றி ஜமாஅதுல் முஸ்லிமீனில் இல்லாத எவருக்கும் ஸலாத்தைக்கொண்டு ஆரம்பிப்பதில்லை. ஆனால் அவர்கள் எமக்கு ஸலாம் சொன்னால் அதற்கு அழகான முறையில் பதில் சொல்லுகின்றோம்.
ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கும் இஸ்லாத்தின் பெயரால் நரகின்பால் அழைக்கும் ஏனைய பிரிவுகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களில் ஒன்று அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஹதீஸ்களை ஒன்னுடன் மற்றொன்று முரண்படக்கூடியதாக முன் வைப்பார்கள். நேர்வழியில் இருக்கும் ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் ஸஹீஹான ஹதீஸ்கள் அத்தனையையும் கருத்திற் கொண்டு ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது.
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-
அல்லாஹ் மிகச் சிறந்த செய்தியை (முரண்பாடில்லாமல்) ஒன்றையொன்று ஒத்த வேதமாக இறக்கியருளியுள்ளான். அதன் மூலம் தங்களது ரப்பைப் பயப்படக்கூடியவர்களின் தோல் உரோமங்கள் சிலிர்த்து விடுகின்றன. (அதன்) பின்னர் அவர்களது தோல்க ளும், அவர்களது உள்ளங்களும் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் இளகிவிடுகின்றன. அதுதான் அல்லாஹ்வின் நேர்வழிகாட்டலாகும். (அவன்) நாடுபவர்களை அதனைக் கொண்டு நேர்வழியில் செலுத்து கின்றான். மேலும் யாரை அல்லாஹ் வழிகேட்டில் செலுத்துகின்றானோ அவனை நேர்வழியில் செலுத்துவோர் எவரும் இல்லை.
( 3 9 : 2 3 )
பிறருக்கு ஸலாம் சொல்வது சம்பந்தமாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ள முக்கியமான சில விடயங்களை இப்போது உங்களுக்கு நாம் முன்வைக்கின்றோம்.
0 1 - அபூ ஹுரைரா (ரலி)கூறுகின்றார்கள்:-
“ஒரு முஸ்லிம் (மற்றொரு) முஸ்லிமுக்கு செலுத்த வேண்டிய கடமை ஆறு” என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரவர்களே! அவை என்ன?” எனக் கேட்கப்பட்டது. “அவரை சந்தித்தால் அவர்மீது ஸலாம் சொல் வீராக!......................................
(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஸலாம் 03)
0 2 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
சிறுவர்கள் பெரியவர்கள் மீதும், கடந்துசெல்பவர்கள் அமர்ந்திருப்பவர்கள்; மீதும், குறைவானவர்கள் கூடுதலானவர்கள் மீதும் ஸலாம் சொல்ல வேண்டும்.
(ஸஹீஹுல் புஹாரி கி. இஸ்திஃதான் 04)
0 3 - அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகின்றார்கள்:-
“(செயல்களால்) சிறந்த இஸ்லாம் எது?” என ஒரு மனிதர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்டார். (அதற்கு) “உணவளிப்பதும், (நீர்) அறிந்தவர் மீதும், அறியாதவர் மீதும் ஸலாம் சொல்வதுமாகும்.” எனக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி. ஈமான் 05)
0 4 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
யூத கிறிஸ்தவர்களைப் பாதையில் சந்தித்தால் அவர்களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காதீர்கள். அதிலே அவர்கள் ஒதுங்கிச் செல்லும்படி அழுத்தம் கொடுங்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி. ஸலாம் 04 )
0 5 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
இணைவைப்போரைப் பாதையில் சந்தித்தால் அவர் களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காதீர்கள். அதிலே அவர்கள் ஒதுங்கிச் செல்லும்படி அழுத்தம் கொடுங்கள்.
( முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ் )
0 6 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் “வ அலைக்கும்” (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள்!
(ஸஹீஹுல் புஹாரி கி. இஸ்திஃதான் 04)
0 7 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
எவன் கைவசம் எனது உயிருள்ளதோ அவன்மீது சத்தி யமாக! (நீங்கள்) விசுவாசம்கொள்ளாத வரையில் சுவனம் செல்ல மாட்டீர்கள். பரஸ்பரம் அன்பு செலுத்தாத வரையில் விசுவாசம் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு விடயத்தை அறிவிக்கட்டுமா? அதனைச் செய்தால் (நீங்கள்) பரஸ்பரம் அன்பு பாராட்டுவீர்கள். (அதுதான்) உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பிக் கொள்ளுங்கள்! (அபூ தாவூத் கி. அதப் 143 - ஸஹீஹ்)
மேலேயுள்ள ஹதீஸ்களைத் தூய்மையுடன் நீஙகள் படித்தால் நேர்வழியில் இருக்கும் கூட்டத்தினர் அந்தக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ளவர்களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்கக் கூடாது எனும் உண்மை உங்களுக்குத் தெளிவாகிவிடும்.
மேலேயுள்ள ஏழு ஹதீஸ்களும் ஸலாம் பற்றிய தெளிவான ஒரு விளக்கத்தை எமக்குக் கற்றுத் தருகின்றன. ஸலாம் என்பது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செலுத்தவேண்டிய கடமை என்பதை முதலாவது ஹதீஸ் எமக்குப் போதிக்கின்றது. அந்த ஸலாத்தை முதலில் ஆரம்பிக்கக் கடமைப்பட்டவர் யார் என்பதனை இரண்டாவது ஹதீஸ் கூறுகின்றது. முஸ்லிம்களில் அறிமுகமானவர் களுக்கு மட்டுமல்லாது அறிமகமற்றவர்களுக்கும் ஸலாம் சொல்ல வேண்டும் என மூன்றாவது ஹதீஸ் எமக்குக் கற்றுத்தருகின்றது.
தாமும் முஸ்லிம்கள் என்பதாக வாதித்துக்கொண்டு சுவனம் செல்லும் கூட்டத்தில் இணைந்துகொள்ளாத முக்கியமான மூன்று சாரார் ரஸூலுல்லாஹி ச அவர்களது காலத்தில் வாழ்ந்தார்கள். யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ;ரிகீன்கள் ஆகியோரே அவர்களா வார்கள். அவர்களில் சிலர் முஸ்லிம்களின் ஸலாத்தைப் பயன் படுத்துபவர்களாக இருந்தார்கள். உண்மையில் முஸ்லிம்களாக இல்லாத அவர்களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்கக் கூடாது என்பதனை நான்காவது, ஐந்தாவது ஹதீஸ்கள் கூறுகின்றன. மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகிய இரண்டு நபிமார்களின் சமுதாயங்களும் ஒரு காலத்தில் முஸ்லிம்களாக இருந்து பின்னர் வழிகெட்டுச் சென்றவர்களாவார்கள். அந்த இரு சமுதாயங்களையும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்பதாக இஸ்லாம் கூறுகின்றது. அவர்கள் முஸ்லிம்களுக்கு ஸலாம் சொன்னால் “வ அலைக்கும்” என்பதாக மட்டுமே பதில் கூற வேண்டும் என்பதனை ஆறாவது ஹதீஸ் எமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
விசுவாசம் ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் பரஸ்பரம் அன்பு செலுத்துவது நிபந்தனையாகும். விசுவாசிகளுக்கிடையிலான அன்பை ஏற்படுத்தும் ஒரு காரணியாகவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பும்படி கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பதனை ஏழாவது ஹதீஸ் எடுத்துக் கூறுகின்றது. ஜமாஅதுல் முஸ்லிமீன் இருக்கும்போது அதனை அறிந்த எவரும் அதற்கு வெளியில் இருக்க முடியாது. ஏனெனில் ஜமாஅதுல் முஸ்லிமீன் என்பது முஸ்லிம்களின் ஒரே கூட்டமைப்பாகும். அதற்கு வெளியில் இருந்து மரணிப்போர் ஜாஹிலிய்யத்தில் மரணிப்பதன் காரணமாக நரகையே சென்றடைவார்கள்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பும்படி ஏவிய ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அவர்களது கூட்டமைப்பில் இல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வில்லை. எனவே ஒவ்வொரு விடயத்திலும் எமக்குத் தெளிவாக வழிகாட்டிச் சென்ற ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நாம் ஜமாஅதுல் முஸ்லிமீனில் இல்லாத எவருக்கும் நாம் ஸலாத்தைக்கொண்டு ஆரம்பிப்பதில்லை. ஆனால் அவர்கள் எமக்கு ஸலாம் சொன்னால் நாம் அவர்களுக்கு அழகான முறையில் பதில் சொல்லுகின்றோம். குறைந்தபட்சம் அவர்கள் கூறியதைப் போன்றாவது நாம் கூறுகின்றோம்.
மேலும் (நீங்கள் ஸலாம் எனும்) வாழ்த்துக் கூறப் பெற்றால் அதனைவிடச் சிறந்ததைக் கொண்டு (அவர்களை) வாழ்த்துங்கள். அல்லது அதனை(யாவது) திருப்பிச் சொல்லுங்கள். (0 4 : 8 6)
கேள்வி : 2 5
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
விபச்சாரகன் விபச்சாரம் புரியும்போது விசுவாசியாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் (அவன்) மதுபானம் அருந்தும்போது விசுவாசியாக இருந்து கொண்டு (அவன்) மதுபானம் அருந்துவதில்லை. மனிதர்கள் தனது பக்கம் பார்வையை உயர்த்திடப் பகிரங்கக் கொள்ளையில் ஈடுபடுபவன் விசுவாசியாக இருந்து கொண்டு அதனைக் கொள்ளையிடுவதில்லை.
(ஸஹீஹுல் புஹாரி கி. மழாலிம் 31)
விசுவாசியாக இருந்தவர் விபச்சாரம் புரிதல், மதுபானம் அருந்துதல், கொள்ளையடித்தல் போன்றவற்றில் ஈடுபடும்போது அவர் விசுவாசியாக இருப்பதில்லை என்பதாக ரஸூலுல்லாஹி
(ஸல்)
அவர்கள் கூறியதிலிருந்து மேற்படி தவறுகளைச் செய்பவர்கள் அந்தத் தவறைச் செய்து முடித்ததன் பின்னர் அவர்கள் விசு வாசிகளாக இருப்பார்கள் என்பதனை நாம் விளங்கிக்கொள்ள முடியும். விசுவாசியாக இருந்தவர்கள் விசுவாசத்தை இழந்து மீண்டும் விசுவாசிகளாக மாறும்போது அதற்கு அவர்கள் பைஅத் செய்ய வில்லையே.........? விசுவாசியாக மாறுவதற்கு பைஅத் செய்வது அவசியம் எனக் கூறும் உங்களது கூற்று தவறு என்பதனை இந்த ஹதீஸ் தெளிவாக நிரூபிக்கின்றதே..........?பதில் :
விபச்சாரம் புரிதல், மதுபானம் அருந்துதல், கொள்ளை யடித்தல் போன்றவை மிகப் பயங்கரமான குற்றமாக இருந்தாலும் அவற்றைச் செய்வோர் காபிர்களாக மாறுவதில்லை என்பது சுவனம் செல்லும் ஜமாஅதுல் முஸ்லிமீனின் நம்பிக்கையாகும். நரகின்பால் அழைக்கும் இன்றுள்ள ஏனைய பிரிவுகளும் இதனையே கூறுகின்றன. இவ்வுண்மைக்கு மாறாக: மேற்படி பாவங்களைச்செய்வோர் அவற்றைச் செய்யும்போது விசுவாசியாக இருப்பதில்லை என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நீங்கள் தவறாகப் புரிந்துள்ளீர்கள்.
ஹதீஸ்களை சரியாக விளங்கிக்கொள்வதற்கு அதனுடன் சம்பந்தமான ஏனைய ஹதீஸ்களையும், குர்ஆன் வசனங்களையும் எடுத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சரியான விளக்கம் கிடைக்கும். நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள ஹதீஸில் பெரும்பாவங் களைச் செய்யும்போது அதனைச் செய்பவர்கள் விசுவாசிகளாக இருப்பதில்லை எனக் கூறப்பட்டுள்ளதை வைத்து அத்தகையவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டதாகப் புரிந்துள்ளீர்கள். எனவேதான் அவர்கள் பைஅத் செய்யாமல் எவ்வாறு விசுவாசிகளாக மாற முடியும் எனக் கேட்டுள்ளீர்கள்.
அபூதர் (ரலி) கூறுகின்றார்கள்:-
“எனது ரப்பிடமிருந்து வரக்கூடிய ஒருவர் என்னிடம் வந்தார். எனது உம்மத்தினின்றும் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை யாக்காது யார் மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுழைவார் என எனக்கு (அவர்) நன்மாராயம் கூறினார்.” என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள். (அவர்) விபச்சாரம் புரிந்தாலுமா? திருடினாலுமா? என (நான்) கேட்டேன். “விபச்சாரம் புரிந்தாலும் சரியே! திருடினாலும் சரியே!” என்பதாகக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி. ஜனாயிஸ் 01)
விபச்சாரம் புரிதல், திருடுதல் போன்ற செயல்கள் விசுவாசியாக உள்ள ஒருவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடுமாக இருந்தால் அவற்றைச் செய்தவர் சுவனம் நுழைவார் என்பதாக அல்லாஹ் எவ்வாறு தனது நபிக்கு நன்மாராயம் கூறுவான்? எனவே மேற்படி பாவங்களைச் செய்பவர் அதனைச் செய்யும்போது விசுவாசியாக இருப்பதில்லை என்பதன் பொருள் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டார் என்பதல்ல. இஸ்லாத்தை விட்டும் வெளியேறாத ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதற்காக மீண்டும் பைஅத் செய்ய வேண்டிய தேவைதான் என்ன.............?
கேள்வி : 2 6
எமது சமூகத்தில் உள்ளவர்கள் கூட்டாகத் தொழும்போது அவர்களுடன் நீங்கள் சேர்வதில்லை. மாறாக அனேகமான நேரங் களில் தனியாகவே தொழுகின்றீர்கள். அவர்களது தொழுகையைத் தவறு என்பதாக நீங்கள் கருதினாலும் கூட்டுத் தொழுகையின் நன்மையை அடைவதற்காக அவர்களுடன் நீங்கள் சேர்ந்து தொழுவதே சரியான நடைமுறை. ஏனெனில் தொழுகை நடாத்துவோரது தவறுகள் அவர்களையே சாரும் என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) கூறியிருக்க : நீங்கள் இவ்வாறு ஒதுங்குவது தவறல்லவா...?
பதில் :
நரகம் செல்லும் பிரிவுகள் காணப்படக்கூடிய காலத்தில் அனைத்துப் பிரிவுகளையும் விட்டு ஒதுங்கும்படி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள். சுவனம் செல்லும் ஒரே கூட்டமைப்பான ஜமாஅதுல் முஸ்லிமீனும், அதற்குரிய ஒரு இமாமும் இல்லாவிட்டால்கூட பிரிவுகளுடன் இணைய வேண்டாம் என ரஸூலுல்லாஹி (ஸல்) வழிகாட்டியிருக்கும்போது இஸ்லாத்தின் பெயரால் பல பிரிவுகளாகப் பிரிந்து மக்களுடன் நாம் எவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து தொழுவது...........?
கூட்டாகத் தொழ வேண்டும் என்பதற்காக காதியானிகளின் ஊரிலே வசிக்கும் ஒரு முஸ்லிம் அவர்களின் தொழுகையிலே சென்று சேர்ந்து தொழுவதை நாம் சரி காண்போமா? ஜமாஅதுல் முஸ்லிமீன் அல்லாத ஏனைய அனைத்துப் பிரிவுகளும் நரகம் செல்லக்கூடியவை என ரஸூலுல்லாஹி (ஸல்) தெளிவுபடுத்தியதன் பின்னர் அவற்றுடன் சேர்ந்து தொழுவது எந்த விதத்திலும் இஸ் லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. எனவே நேர்வழியில் இருக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும். ஏனைய பிரிவுகளில் உள்ளவர்களுடன் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையுட்பட மார்க்க விடயங்களில் சேரக் கூடாது.
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
(தலைவர்கள்) உங்களுக்காகத் தொழுகை நடாத்துவார்கள். (அதனை) சரியாகச் செய்தாலும் உங்களுக்குக் (கூலி கிடைக்கும், அவர்கள்) தவறிழைத்தால் உங்களுக்குக் (கூலி கிடைக்கும்) அவர்களுக்குக் குற்றமாக (அமைந்துவிடும்.)
(ஸஹீஹுல் புஹாரி கி. ஜமாஆ வல் இமாமா - 27)
எல்லாப் பிரிவினருடனும் சேர்ந்து தொழ வேண்டும் என்பதற்கு ஆதாரமாக நீங்கள் சுட்டிக்காட்டிய ஹதீஸை மேலே தந்துள்ளோம். இஸ்லாத்தை ஏற்று, சுவனம் செல்லும் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு இமாம் பிழைகள் விட்டால் அவரின் பின்னால் நாம் தொழாதிருக்க வேண்டிய அவசியம் கிடையாது என இந்த ஹதீஸ் எமக்குக் கூறு கின்றது. இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து யார் தொழுவித்தாலும் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழ வேண்டும் என எவராவது சட்டம் கூறினால் : காதியானிகளின் ஊரிலே வசிக்கும் தனியொரு முஸ்லிம் காதியானிகளது கூட்டுத் தொழுகை நடக்கும்போது அவர்களுடன் சேர்ந்து தொழ வேண்டுமா? எனும் கேள்விக்கும் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளார்.
தொழுகை நடாத்துபவர் சுவனம் செல்லும் கூட்டமைப்பில் உள்ள ஒருவராக இருந்தால் தொழுகையில் அவர் இழைக்கும் தவறுகளை சகித்துக்கொண்டு அவரைப் பின்பற்றித் தொழ வேண்டும். அதேநேரம் அந்த இமாம் பித்அத்தைச் செய்பவராகவோ அல்லது தொழுகையை அதனது கடைசி நேரத்தை விட்டும் பின்படுத்துப வராகவோ இருந்தால் அதன்பிறகு அவரைப் பின்பற்றித் தொழக் கூடாது. அந்த இமாம் ஈமான் உள்ளவராக இருக்கவும் மாட்டார்.
ரஸூலுழ்ழாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்று வார்கள். (அவர்கள்) தொழுகையை அதற்குரிய நேரங்களை விட்டும் பிற்படுத்துவார்கள். அத்துடன் பித்அத்துக்களையும் தோற்றுவிப் பார்கள். (அப்போது) "நான் எவ்வாறு செய்துகொள்ள வேண்டும்?" என இப்னு மஸ்ஊத் ல கேட்டார்கள். 'உம்மு அப்தின் மகனே! எவ்வாறு செய்துகொள்ள வேண்டும் என என்னிடம் கேட்கின்றாயா? அழ்ழாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது" எனக் கூறினார்கள்.
( இப்னுமாஜா, அஹ்மத், தபரானி - ஸஹீஹ் ஜா.ஸ-3664 )