...

கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 11

கேள்வி : 3 0
“ஐங்காலத் தொழுகைகளில் உங்களில் ஒருவரை இமாமாக நியமித்துக் கொள்ளுங்கள்” “மூன்று நபர்கள் பிரயானத்தில் இருந்தால் அவர்களில் ஒருவரை அவர்கள் இமாமாக நியமித்துக் கொள்ளட்டும்” என்பன போன்ற ஹதீஸ்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு முழு வாழ்வுக்கும் ஒரு அமீர் இருப்பது கடமை என நீங்கள் வாதிப்பதாக ஒரு சில உலமாக்கள் கூறுவதில் உண்மை ஏதும் உள்ளதா..........?

கேள்வி : 3 1
அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் நீங்களே அல்லாஹ்வின் தீர்ப்புக்களை வழங்காமல் இருக்கின்றீர்கள். திருமணம் முடித்தபின்னர் விபச்சாரம் செய்தவர்களைக் கல்லெரிந்து கொள்ள வேண்டும். என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு. நடைமுறையில் அந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு ஒருபோதும் நீங்கள் அந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில்லை. ஆகவே நீங்கள் சுமத்தும் குற்றம் உங்கள்மீதும் ஏற்படுமல்லவா........................?

கேள்வி : 3 2
இன்றைய நிலையில் நாம் முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பிறரது அதிகாரத்தின் கீழ் வாழும் ஒரு தலைவருக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என நாம் பைஅத் செய்வதற்கு என்ன தேவை உள்ளது.............?





கேள்வி : 3 0
“ஐங்காலத் தொழுகைகளில் உங்களில் ஒருவரை இமாமாக நியமித்துக் கொள்ளுங்கள்” “மூன்று நபர்கள் பிரயானத்தில் இருந்தால் அவர்களில் ஒருவரை அவர்கள் இமாமாக நியமித்துக் கொள்ளட்டும்” என்பன போன்ற ஹதீஸ்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு முழு வாழ்வுக்கும் ஒரு அமீர் இருப்பது கடமை என நீங்கள் வாதிப்பதாக ஒரு சில உலமாக்கள் கூறுவதில் உண்மை ஏதும் உள்ளதா..........?


பதில்:
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
(இமாமின்) கட்டுப்பாட்டில் இருந்து யார் கையை உருவிக் கொள்கின்றாரோ (அவர்) மறுமை நாளில் தனக்கு எவ்வித ஆதா ரமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார். மேலும் யார் தனது கழுத்திலே பைஅத் இன்றி மரணிக்கின்றாரோ (அவர் நரகம் செல்லும்) ஜாஹிலிய்ய மரணத்தையே தழுவுவார்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 13 )

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
மூன்று (சாரார் உள்ளனர்.) அவர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். அல் ஜமாஅத்தை விட்டும் பிரிந்து, தனது இமாமுக்கு மாறுசெய்து, மாறு செய்பவனாகவே மரணித்த மனிதன் : அவன் பற்றிக் கேட்கவே வேண்டாம். (அவன் முதலாவது வகையாவான்.) தனது எஜமானிடமிருந்து தப்பியோடிய அடிமைப் பெண் அல்லது அடிமையான ஆண். (இரண்டாவது வகையாவான்.) தனது கணவன் உலகத் தேவைகளைப் போதிய அளவு வழங்கியிருந்தும் அவன் இல்லாத சந்தர்ப்பங்களில் (வெளியில்) சுற்றித் திரிந்த பெண் (மூன்றாவது வகையாவாள்)
(அதபுல் முப்ரத் கி. மரீழ் 41 - ஸஹீஹ்)

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
அல்லாஹ்வைத் தவிர (தகுதியான) இலாஹ் எவரும் இல்லை எனவும், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் எனவும் சான்று பகரும் முஸ்லிமான மனிதரின் இரத்தம் மூன்று (காரணங்களில்) ஒன்றைக்கொண்டேயன்றி ஆகுமாக மாட்டாது. உயிருக்குப் பதிலாக உயிர் (பலிவாங்கப்படும்.) திருமணம் முடித்தும் விபச்சாரம் செய்தவன், அல்ஜமாஅத்தை விட்டும் பிரிந்து தனது தீனை விட்டும் பிரிந்து செல்பவன்.
(ஸஹீஹுல் புஹாரி கி. தியாத் 05)

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
யார் அல் ஜமாஅத்தை விட்டும் வெளியேறி அல்ஜமாஅத்தை விட்டும் பிரிந்துவிடுகின்றாரோ அவர் ஜாஹிலிய்ய மரணத்தைத் தழுவுவார்.
(உஸூலுஸ் ஸுன்னஹ் - ஸஹீஹ்)

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
எனது கூற்றைச் செவிமடுத்து அதனை எத்திவைக்கும் மனிதரை அல்லாஹ் கண்குளிரச் செய்வானாக! இதன்போது சிலவேளை விளக்கம் இல்லாத ஒருவர் பிக்ஹை (ஹதீஸை ஏனையோரின் பால்) சுமந்து செல்பவராக இருக்கலாம். சிலவேளை தன்னைவிட விளக்கசாலியிடம் எவரேனும் பிக்ஹைச் சுமந்து செல்லலாம். மூன்று (விடயங்கள் உள்ளன) எந்தவொரு விசுவாசியின் உள்ளமும் அவற்றிலே மோசடி செய்யாது. செயல்கள் (அனைத் தையும்) அல்லாஹ்வுக்கு எனும் நோக்கத்துடன் செய்தல், முஸ்லிம்களின் பொறுப்பாளர்களுக்கு விசுவாசமாக நடத்தல், அவர்களது கூட்டமைப்புடன் சேர்ந்திருத்தல். (என்பனவே அந்த மூன்று விடயங்களுமாகும்.) ஏனெனில் நிச்சயமாக அவர்களது அழைப்பு அவர்களுக்கு அப்பால் உள்ளவர்களையும் சூழ்ந்து கொள்கின்றது.
(இப்னு மாஜா கி. மனாஸிக் 76 - ஸஹீஹ்)

ஐந்து ஸஹீஹான ஹதீஸ்களை மேலே நாம் முன் வைத்துள்ளோம். அந்த ஐந்து ஹதீஸ்களிலும் ஐங்காலத் தொழு கைக்காக ஒரு இமாம் நியமிக்கப்படுவது பற்றிக் கூறப்பட்டுள்ளதா? அல்லது முஸ்லிம்களின் முழு வாழ்க்கைக்கும் ஒரு இமாம் இருப்பது பற்றிக் கூறப்பட்டுள்ளதா? என நாம் முன்வைத்துள்ள ஐந்து ஹதீஸ் களையும் நன்றாகப் படித்துவிட்டு நீங்களே ஒரு சரியான முடிவிற்கு வாருங்கள். “ஐவேளைத் தொழுகைக்காக இமாம் நியமிப்பது பற்றிய ஹதீஸ்களை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டதனால்தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு ஒரு அமீரிடம் பைஅத் செய்ய வேண்டும் என அவர்கள் கூறுகின்றார்கள்” என்பதாக எம்மிது குற்றம் சுமத்தப்படுகின்றது. நரகின்பால் அழைக்கும் உலமாக்கள் இவ்வாறு கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்பதனை இந்த ஹதீஸ்களை நிதானமாக நீங்கள் படித்து விளங்கிக்கொள்ளலாம்.

மேலே நாம் முன்வைத்துள்ள ஒரு ஹதீஸிலாவது தொழுகை எனும் வார்த்தையே கிடையாது. அந்த அத்தனை ஹதீஸ்களும் முஸ்லிமாக இருக்கும் எவருக்கும் ஒரு அமீர் இருந்தேயாக வேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகின்றன. ஆகவே ஜமாஅதுல் முஸ்லிமீனும், அதற்கான இமாமும் இருக்கக்கூடிய காலங்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்களின் அந்தத் தலைமைத்துவத்தை ஏற்று இஸ்லாத்திற்காக பைஅத் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் அசைக்க முடியாத அடிப்படை என்பது தெரிகின்றது. உண்மை என்னவென்றால் ரஸூலுல்லாஹி (ஸல்) சத்தியத்தை முன் வைத்தபோதுகூட அதனை நிராகரித்தவர்கள் சத்தியத்தில் குறை இருப்பதாகக் கூறினார்களே யன்றி அவர்களது வழிகேட்டை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
(நான்) எனது உம்மத்தினருக்குப் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கம் தலைவர்களையேயாகும்.
(அபூ தாவூத் கி. பிதன் 01 - ஸஹீஹ்)


கேள்வி : 3 1
அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் நீங்களே அல்லாஹ்வின் தீர்ப்புக்களை வழங்காமல் இருக்கின்றீர்கள். திருமணம் முடித்தபின்னர் விபச்சாரம் செய்தவர்களைக் கல்லெரிந்து கொள்ள வேண்டும். என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு. நடைமுறையில் அந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு ஒருபோதும் நீங்கள் அந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில்லை. ஆகவே நீங்கள் சுமத்தும் குற்றம் உங்கள்மீதும் ஏற்படுமல்லவா........................?

பதில் :
அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பது எமது கூற்றல்ல. நீங்களும் நாங்களும் நம்புவதாகக் கூறுகின்ற அல்லாஹ்வின் தீர்ப்பாகும்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-
அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்.
( 0 5 : 4 4 )

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-
அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள்தான் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
( 0 5 : 4 5 )

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-
அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள்.
( 0 5 : 4 7 )

எனவே அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பது எங்கள் அனைவரையும் படைத்த அல்லாஹ்வின் தீர்ப்பு என்பது மேலேயுள்ள மூன்று அல்குர்ஆனிய வசனங்களின் மூலம் நிரூபணமாகின்றது.

இப்போது உங்களது கேள்வியை நாம் எடுத்துப் பார்த்தால் தீர்ப்புக்கள் வேறு, அவற்றை நடைமுறைப்படுத்துவது வேறு என்பதனைப் புரிந்துகொள்ளாத காரணத்தினால் உங்களுக்கு மேற்படி கேள்வி எழுந்துள்ளது என்பது தெளிவாகின்றது. திருமணம் முடித்த வர்கள் விபச்சாரம் செய்தால் அவர்கள் கல்லெரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பை நாம் தெளிவாகக் கூறுகின்றோம். ஆனால் அந்தத் தண்டனையை நிறைவேற்றும் சக்தி எமக்குக் கிடையாது. அதனை நிறைவேற்றும் சக்தி இல்லாததை வைத்து நாம் அந்தத் தீர்ப்பை வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்துவது குற்றம் சுமத்துபவரின் தெளிவின்மையாகும்.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் மனைவியரைப் பற்றி அவதூறு எழுதியதற்குத் தண்டனையாக ஸல்மான் ருஷ்தி என்பவனுக்கு மரணதண்டனை விதித்து ஈரானிய அரசாங்கம் தீர்ப்பளித்தது. ஆனால் இன்றுவரை அவன் உயிர்வாழ்வதை சுட்டிக்காட்டி அவனைக் கொலை செய்யும் தீர்ப்பே வழங்கப்படவில்லை என எவராவது கூறினால் அது ஏற்கக் கூடியதா...........?

அப்படியானால் இந்த விடயத்தில் ஏனையவர்கள் செய்யும் குற்றம் என்ன எனும் கேள்வி உங்களுக்கு ஏற்படும். அவர்கள் அல்லாஹ் இறக்கிய தீர்ப்பைச் சொல்வதே இல்லை என்பதுதான் அவர்கள் செய்யும் குற்றமாகும். ஐவேளைத் தொழுகையை விட்டவன் நிராகரித்துவிட்டான் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். எனவே தொழுகையை விட்டவன் நிராகரித்து விட்டான் என நாம் கூறுகினறோம். ஆனால் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் அவனை முஸ்லிம் என்பார்கள். இது சுவனம் செல்லும் ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கும் ஏனைய வர்களுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசங்களுள் ஒன்றாகும். ஒரே தலைமைத்துவத்தின் கீழ் மக்களை ஒன்றிணைத்த ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மிகப்பெரிய போராட்டத்தின் பின்னர் மதீனாவிலே அல்லாஹ்வின் நாட்டத்தின்படி ஒரு இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள். அந்த ஆட்சியிலே முற்றுமுழுதாக அல்லாஹ் இறக்கியதைக் கொண்டே தீர்ப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பைப் பாருங்கள்.

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
(முஸ்லிம்களில்) யார் தனது தீனை மாற்றுகின்றானோ அவனைக் கொன்றுவிடுங்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி. ஜிஹாத் 147)

இஸ்லாமிய ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வழங்கிய ஒரு தீர்ப்பையே மேலே நீங்கள் காண்கின்றீர்கள். ஆனால் ஒரு இஸ்லாமிய ஆட்சி இருந்தும்கூட இந்தத் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்ற முடியாத சந்தர்ப்பங்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
அனஸ் (ரலி) கூறுகின்றார்கள்:-
பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் எங்களில் ஒருவராக இருந்தார். (ஸூரா) பகராவையும், ஆலு இம்ரானையும் (அவர்) கற்றிருந்தார். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்காக எழுதக்கூடிய (எழுத்தாள)ராகவும் இருந்தார். பின்னர் (அவர் முஸ்லிம்களை விட்டும்) ஓடிச் சென்று வேதம் கொடுக்கப்பட்டோருடன் சேர்ந்துகொண்டார். எனவே (அவர்கள்) “(இவர்) முஹம்மதுக்காக எழுதக் கூடியவராக நிச்சயமாக இருந்தவராவார்” எனக் கூறி அவனை உயர்த்தினார்கள். (மக்களும்) அவன்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். (பூமியில் அவன்) தரிபட்டிருக்கவில்லை. அல்லாஹ் அவனை இறக்கும்படி செய்துவிட்டான். எனவே அவனுக்காகக் குழி தோன்டி அவனைப் புதைத்தார்கள். காலையில் அவனைப் பூமி அதன் மேற்புறத்தில் எறிந்துவிட்டிருந்தது. பின்னர் மீண்டும் அவனுக்குக் (குழி) தோண்டி அவனைப் புதைத்தார்கள். காலையில் அவனைப் பூமி அதன் மேற்புறத்தில் எரிந்துவிட்டிருந்தது. பின்னர் மீண்டும் அவனுக்குக் (குழி) தோண்டி அவனைப் புதைத்தார்கள். (அதன்) பின்னர் அவனை எறியப்பட்டவனாகவே விட்டுவிட்டார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் முகத்திமா 50)

மதீனாவிலே இஸ்லாமிய ஆட்சியை நடாத்திக்கொண்டிருந்த ரஸூலுல்லாஹி (ஸல்) ஒவ்வொரு விடயத்திலும் அல்லாஹ் இறக்கிய தீர்ப்புக்களைக் கொண்டு தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவை அனைத்தையும் அவர்களால் செயல்படுத்த முடிய வில்லை. முர்தத்தாகிச் செல்பவனைக் கொலை செய்யும்படி ஏவிய ரஸூலுல்லாஹி (ஸல்) சிலவேளைகளில் அதனை செயல்படுத்த முடியாமல் இருந்தார்கள். இதனைத்தான் மேலேயுள்ள ஹதீஸ் எமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.

முர்த்தத்தாகிச் சென்றவன் இஸ்லாமிய ஆட்சியின் எல்லைகளை விட்டும் வெளியேறிச் சென்றுவிட்டதனால் அவனைக் கொல்ல முடியாவிட்டாலும் அவன் கொல்லப்பட வேண்டியவன் எனும் அல்லாஹ்வின் தீர்ப்பை ரஸூலுல்லாஹி (ஸல்) வழங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பைச் சொன்ன ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவற்குரிய சக்தி இல்லாத காரணத்தினால் அதனை செயல்படுத்தவில்லை. இந்த நிலையில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்க வில்லை எனக் கூறுவது பொருத்தமாகுமா............?

எனவே அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளித்த ஒருவருக்கு அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய சக்தி இல்லாத சந்தர்ப்பத்தில் “அவர் அல்லாஹ் இஙக்கியதைக் கொண்டு தீhப்பு வழங்கவில்லை” எனக் குற்றம் சுமத்துவது முற்றிலும் தவறானதாகும்.


கேள்வி : 3 2
இன்றைய நிலையில் நாம் முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பிறரது அதிகாரத்தின் கீழ் வாழும் ஒரு தலைவருக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என நாம் பைஅத் செய்வதற்கு என்ன தேவை உள்ளது.............?

பதில் :
இன்று பெரும்பாலும் மார்க்கம் என்பது தனிதனித சுதந்திரம் எனும் வரையறைக்குள் அடக்கப்பட்டு எத்தனையோ இஸ்லாமியக் கடமைகளைச் செய்வதற்கு உலகின் பெரும்பாலான ஆட்சிகள் அனுமதி வழங்கியுள்ளன. இதனடிப்படையில் அந்நியர்களின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்களின் தலைவர் எத்தனையோ விடயங்களை செயல்படுத்தத்கூடியதாக உள்ளது.

ஆனால் எங்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ள ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஆரம்ப காலத்தில் அதாவது மக்காவிலே வாழ்ந்தபோது முஸ்லிம்கள் தங்களை இனம் காட்டுவதே முடியாத காரியமாக இருந்தது. அந்த நிலையிலும் அல்லாஹ்வின் வழிகாட்டலின் அடிப்படையில் ரஸூலுல்லாஹி (ஸல்) மக்களிடமிருந்து மக்கள் பைஅத் எடுத்தார்கள். இவ்வாறு எங்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ள ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் செய்யச்சொன்ன, செய்து காட்டிய விடயத்தை எமது அறிவைக் கொண்டு மறுப்பது தெளிவான நிராகரிப்பை ஏற்படுத்தும் செயலாகும். அல்லாஹ் அதத்கைய செயலை விட்டும் எங்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். இது சம்பந்தமாக நாம் தனியான ஒரு நூலையே வெளியிட்டுள்ளோம். அதிலே இந்தக் கேள்விக்கான விரிவான பதில் காணப்படுகின்றது. நேர்வழியைத் தேடுபவர்கள் அந்த நூலைக் கட்டாயம் எடுத்துப் படித்துப் பாருங்கள். சிலவேளை அல்லாஹ் அந்த நூலைக் கொண்டு உங்களை நேர்வழியில் செலுத்தலாம்.