கேள்வி : 3 8
அல்குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது உங்களது அடிப்படை வாதமாகும். ஆனால் ஹதீஸ்களைப் பொறுத்தவரையில் அவற்றில் ஒரு சில ஹதீஸ்கள் நம்மபகமானவையா? இல்லையா என்பதிலே முரண்பாடு உள்ளது. அவற்றில் ஹதீஸ்கலை அறிஞர்கள் முரண்பட்ட கருத்துக்களைத் கூறியுள்ளனர். ஸஹீஹான ஹதீஸ்கள் எவை என்பதிலேயே ஒரு முடிவு இல்லாத நிலையில் அல்குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் பிக்னபற்ற வேண்டும் எனும் உங்களது வாதம் எவ்வாறு நடைமுறைச் சாத்தியமாகும்.......?
கேள்வி : 3 9
ஸஹீஹான ஹதீஸ்கள் ஒன்றுடன் மற்றொன்று முரண்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறு முரண்படக் கூடிய ஹதீஸ்களை வைத்துக்கொண்டு எவ்வாறு நாம் மன உறுதியுடன் செயல்படுவது? இத்தகைய சிரமங்களின் காரணமாகவே நாம் மத்ஹபுகளைப் பின்பற்றுகின்றோம். ஆனால் நீங்களோ மத்ஹபு களையும் பின்பற்றக்கூடாது எனக் கூறுகின்றீர்கள். அப்படியானால் பொதுமக்கள் எவ்வித சிக்கலுமின்றி உளத் திருப்தியுடன் இஸ்லாத் தைப் பின்பற்றுவதற்கான வழிதான் என்ன.........?
கேள்வி : 4 0
யூத, கிறிஸ்தவப் பெண்களைக்கூட முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம் என்பது உங்களது முடிவாகும். ஆனால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளும் எங்களது சமூகத்தில் உள்ள: உங்களது ஜமாஅத்தில் இணையாத பெண்களைத் திருமணம் செய்வதை நீங்கள் தடுக்கின்றீர்கள்? வேதம் கொடுக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்யலாம் என நீங்கள் கூறினால் இவர்களுக்கும் அல்குர்ஆன் எனும் வேதம் கொடுக்கப்பட்டுள்ளதே.............?
கேள்வி : 3 8
அல்குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது உங்களது அடிப்படை வாதமாகும். ஆனால் ஹதீஸ்களைப் பொறுத்தவரையில் அவற்றில் ஒரு சில ஹதீஸ்கள் நம்மபகமானவையா? இல்லையா என்பதிலே முரண்பாடு உள்ளது. அவற்றில் ஹதீஸ்கலை அறிஞர்கள் முரண்பட்ட கருத்துக்களைத் கூறியுள்ளனர். ஸஹீஹான ஹதீஸ்கள் எவை என்பதிலேயே ஒரு முடிவு இல்லாத நிலையில் அல்குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் பிக்னபற்ற வேண்டும் எனும் உங்களது வாதம் எவ்வாறு நடைமுறைச் சாத்தியமாகும்.......?
பதில் :
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
மேலும் அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் 'மாறாக எமது மூதாதையரை எதன்மீது இருக்கக் கண்டோமோ அதனையே (நாம்) பின்பற்றுவோம்." என (அவர்கள்) கூறுகின்றனர். அவர்களது மூதாதையர் எதனையுமே விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலும் (அவர்களை இவர்கள் பின்பற்றுவார்களா)...................?
( 0 2 : 1 7 0 )
அல்லாஹ் வஹிமூலம் இறக்கியது அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களுமாகும். இந்த இரண்டையும் தவிர வேறு எதனையும் பின்பற்றும்படி கூறி அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி யருளவில்லை. இந்த அடிப்படை உண்மையை அல்லாஹ் அல்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் கூறியுள்ளான். எனவே அல்குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தின் அசைக்கமுடியாத அடிப்படை என்பதை முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். சில ஹதீஸ்களைப்பற்றி அவை நம்பகமானவையா? இல்லையா? என்பதில் அறிஞர்கள் முரண்பட்டுள்ளார்கள் என்பது முற்றிலும் உண்மையே! ஆனால் அவற்றின் உண்மையான நிலையை நாம் அறிந்துகொள்ள முடியாது என்று மட்டும் யாரும் கூற முடியாது. அந்த ஹதீஸ்கள் உண்மையில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியவையா? இல்லையா? என்பதை நாம் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு நல்லதொரு உதாரணமாக தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸைக் குறிப்பிடலாம்.
தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மத்தியில் பரவலாகக் காணப்படும் இஸ்லாத்திற்கு முரணான நம்பிக்கைகளையும், செயற்பர்டுகளையும் இனம் காட்டுவதற்காக தவ்ஹீத் எனும் பிரிவு தோன்றியது. அவர்களில் ஒரு சாரார் தங்களுக்கு அறிவில்லாத விடயங்களில் அவசரப் புத்தியுடன் செயல்பட்டதன் விளைவாக நம்பகமான சில ஹதீஸ்களையும் நம்பகமற்றவை எனத் தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள். அப்படி அவர்கள் கோட்டை விட்ட விடயங்களில் “தஸ்பீஹ் தொழுகை என்பது ஆதாரபூர்வமானதல்ல” எனக் கூறியதும் ஒன்றாகும்.
தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் நம்பகமானவையா? அல்லது நம்பகமற்றவையா? என்பதிலே தீர்க்கமான முடிவை அறியாத பீ. ஜெய்னுலாபிதீன் என்பவர் தமது அவசரப் புத்தியினாலும், தற்பெருமையினாலும் அந்த ஹதீஸ்கள் நம்பகமற்றவை எனக் கூறிவிட்டார். அதனது உண்மை நிலை பற்றி அவர் ஆழமான ஆய்விலே ஈடுபடவில்லை.
தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் நம்பகமானவை என ஒரு சாராரும், அவை நம்பகமற்றவை என மற்றொரு சாராரும் சர்ச்சைப் பட்டுக் கொண்டிருந்தனர். அந்த ஹதீஸ்களின் உண்மை நிலை பற்றி நாம் ஒரு ஆழமான ஆய்வை மேற்கொண்டதன்மூலம் அந்த ஹதீஸ் நம்பகமற்றது எனக் கூறுவோரின் ஆதாரங்களுக்குத் தக்க பதிலைக் கொடுத்து அந்த ஹதீஸ் நம்பகமானதே என்பதை மக்களுக்குத் தெளிவாக நிரூபித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! இவ்வாறு நம்பகமானதா? நம்பகமற்றதா? என்பதில் மாறுபட்ட கருத்துள்ள ஒவ்வொரு ஹதீஸையும் அதனது உண்மையான நிலையை அறிந்துகொள்வது சாத்தியமான ஒன்றேயாகும்
நம்பகத் தன்மையில் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஹதீஸாக இருந்தாலும் அதனை நீங்கள் முஸ்லிம்களின் அறிஞர்களிடத்தில் முன்வைக்கும்போது அதற்குரிய தெளிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பிட்ட சில ஹதீஸ்களின் நம்பகத் தன்மை பற்றி அறிஞர்கள் முரண்பட்டுக் கூறியிருப்பது ஹதீஸ்களில் காணப்படும் குறையல்ல. மாறாக மனிதன் எனும் ரீதியில் ஒரு சில அறிஞர்களிடம் ஏற்பட்ட தவறு என்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த அறிஞர்கள் தமக்குத் தேவையான விபரங்களை மிகவும் சிரமப்பட்டுத் தேட வேண்டிய நிலை அன்று காணப்பட்டது. ஆனால் அன்று அவர்கள் ஒவ்வொருவரும் செய்த சேவைகளின் தொகுப்பு இன்று எமது கைகளில் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றது. அன்று மிகப்பெரிய அறிஞர்களிடம் இருக்காத அறிவுநூல்களின் களஞ்சியம் இன்று எம்மிலே சாதாரண ஒரு அறிஞரிடம் காணப்படக்கூடிய அளவிற்கு இன்றைய காலத்தில் அல்லாஹ் வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளான்.
ஆகவே வானத்திலிருந்து இறக்கப்பட்ட வஹியை மாத்திரம் பின்பற்ற வேண்டும் எனும் கொள்கை முற்றிலும் நடைமுறைச் சாத்தியமானதாகும். அது அல்லாஹ்வின் கட்டளையாகும். அதுதான் நேர்வழியுமாகும். அது அல்லாததைப் பின்பற்றுவோர் ஒரு போதும் சுவனத்தை அடைய முடியாது என்பதே உண்மையாகும்.
நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு நேர்வழி வரும். எனவே எனது (அந்த) நேர்வழியை யார் பின்பற்றுகின்றார்களோ அவர்களுக்கு (மறுமையில்) எவ்விதப் பயமும் இல்லை. மேலும் அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள். ( 0 2 : 3 8 )
கேள்வி : 3 9
ஸஹீஹான ஹதீஸ்கள் ஒன்றுடன் மற்றொன்று முரண்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறு முரண்படக் கூடிய ஹதீஸ்களை வைத்துக்கொண்டு எவ்வாறு நாம் மன உறுதியுடன் செயல்படுவது? இத்தகைய சிரமங்களின் காரணமாகவே நாம் மத்ஹபுகளைப் பின்பற்றுகின்றோம். ஆனால் நீங்களோ மத்ஹபு களையும் பின்பற்றக்கூடாது எனக் கூறுகின்றீர்கள். அப்படியானால் பொதுமக்கள் எவ்வித சிக்கலுமின்றி உளத் திருப்தியுடன் இஸ்லாத் தைப் பின்பற்றுவதற்கான வழிதான் என்ன.........?
பதில் :
ஹதீஸ்கள் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹியாகும். நிச்சயமாக அதில் ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்துகின்றது. அவை ஒன்று மற்றொன்றுடன் ஒருபோதும் முரண்படமாட்டாது.
அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகின்றார்கள்:-
ரஸூலுழ்ழாஹி (ஸல்) அவர்களிடமிருந்து செவிமடுக்கும் யாவற்றையும் (நான்) எழுதிக்கொண்டிருந்தேன். அதனைப் பாதுகாக்க வேண்டும் என்பது (எனது) நோக்கமாகும். அப்போது குரைஷ்கள் என்னைத் தடுத்து விட்டார்கள். “ரஸூலுழ்ழாஹி (ஸல்) அவர்களிடமிருந்து (நீர்) செவிமடுக்கும் யாவற்றையும் எழுதுகிறீர். ரஸூலுழ்ழாஹி (ஸல்) அவர்களோ மனிதராவார்கள். கோபத்திலும் கதைப்பார்கள், மகிழ்ச்சியிலும் கதைப்பார்கள். எனக் கூறினார்கள். எனவே (நான்) எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். பின்னர் அதுபற்றி ரஸூலுழ்ழாஹி (ஸல்) அவர்களிடம் கூறினேன். உடனே “(நீர்) எழுதுவீராக! எவன் கையில் எனது உயிருள்ளதோ அவன் மீது சத்தியமாக! சத்தியத்தைத் தவிர என்னிலிருந்து எதுவும் வெளிப்பட்டதே இல்லை.” எனக் கூறினார்கள்.
( முஸ்னத் அஹ்மத் - ஸனதுஹு ஸஹீஹ் )
உலக விடயங்கள் பற்றி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அறியாத எத்தனையோ விடயங்கள் இருந்தன. ஆனால் தீன் சம்பந்தமான விடயங்களில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் நேரடியாக வழிநடாத்தப்பட்டார்கள். எனவே அவர்கள் கூறுகின்ற தீன் சம்பந்தமான எந்தவொரு விடயமும் தவறானதாகவோ, அல்லது முரண்பட்டதாகவோ இருப்பதில்லை.
புரைதா (ரலி) கூறுகின்றார்கள்:-
“சிரமத்தில் இருப்பவருக்கு யார் (கடன் கொடுத்து) அவகாசம் அளிக்கின்றாரோ அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்.” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் (ஒருமுறை) “சிரமத்தில் இருப்பவருக்கு யார் (கடன் கொடுத்து) அவகாசம் அளிக்கின்றாரோ அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று இரட்டிப்பு ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்” எனக் கூறினார்கள். (எனவே நான்) “அல்லாஹ்வின் தூரவர்களே! (முதல்முறை) சிரமத்தில் இருப்பவருக்கு யார் (கடன் கொடுத்து) அவகாசம் அளிக்கின்றாரோ அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்.” எனத் தாங்கள் கூறக் கேட்டேன். (அதன்) பின்னர் “சிரமத்தில் இருப்பவருக்கு யார் (கடன் கொடுத்து) அவகாசம் அளிக்கின்றாரோ அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று இரட்டிப்பு ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்.” எனத் தாங்கள் கூறக் கேட்டேன். (இதன் விபரம் என்ன?)” எனக் கேட்டேன். (அதற்கு) “அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும் என்பது கடனுக்குரிய தவணை முடிவடைவதற்கு முன்பாகும். கடனுக்குரிய தவணை முடிவடைந்த பின்னரும் அவருக்கு அவகாசம் அளித்தால் அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று இரட்டிப்பு ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்.” என (விபரித்துக்) கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ்)
வெளிப்டையில் பார்க்கும்போது புரைதா (ரலி) அவர்களுக்கு ஸதகா பற்றிய இரண்டு ஹதீஸ்களும் முரண்பாடாகத் தோன்றின. ஆனால் உண்மையில் அந்த இரண்டு ஹதீஸ்களுக்குமிடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்பதை ரஸூலுல்லாஹி (ஸல்) தெளிவுபடுத்தினர்கள். ஸஹீஹான ஹதீஸ்கள் முரண்படுவதாகக் கூறுகின்றவர்களது நிலை என்ன என்பதை மேலேயுள்ள ஹதீஸ் தெட்டத் தெளிவாக விளக்குகின்றது. அதாவது படைத்தவனால் இறக்கப்பட்ட இஸ்லாத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உண் மையான அறிஞர்களிடம் அதுபற்றிக் கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் நாமாகவே அவசரப்பட்டு ஹமீஸ்களில் முரண்பாடு காணப்படுகின்றது எனக் கூறிவிடக்கூடாது.
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
நிச்சயமாக நான் உங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வேதத்தை வி(ட்)டு(ச் செல்)கின்றேன். அது அல்லாஹ்வின் கயிறாகும். யார் அதனைப் பின்பற்றுகின்றாரோ (அவர்) நேர்வழியில் இருப்பார். யார் அதனை விட்டுவிடுகின்றாரோ (அவர்) வழிகேட்டின்மீது (உள்ளவராக) ஆகிவிடுவார். (இ. ஹிப்பான் கி. இல்ம் - ஸஹீஹ்)
ஸஹீஹான ஹதீஸ்களைப் பின்பற்றுவதில் சிக்கல்கள் இருந்தால் அவை பற்றிய தெளிவை அறிஞர்களிடம் பெற்றுக் கொள்வதுதான் வழியாகும். இமாம்களின் பெயரால் அந்த இமாம் களுக்கு முரணாக எழுதப்பட்டவற்றைப் பின்பற்றுவது ஒருபோதும் சுவனம் செல்வதற்கு உதவ மாட்டாது. ஸஹீஹான ஹதீஸ்களில் முரண்பாடுகள் இருக்கின்றது எனக் கூறி மத்ஹபுகளைப் பின்பற்றுவது இறுதிக்காலத்தில் தோன்றக்கூடிய தஜ்ஜாலின் ஆற்றில் குதிப்பது போன்றாகிவிடும். மத்ஹபுகளது வழிகேட்டை விபரிப்பதானால் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டேயிருக்கலாம். நேர்வழியடைவதற்கு அல்லாஹ்வின் வேதத்தைப் பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வின் வேதம் என்பது குர்ஆனையும் ஹதீஸையும் குறிக்கக்கூடிய சொல்லாகும். அதனை விட்டுவிடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் தெளிவான வழிகேட்டில் சென்றுவிடுவார்கள்.
கேள்வி : 4 0
யூத, கிறிஸ்தவப் பெண்களைக்கூட முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம் என்பது உங்களது முடிவாகும். ஆனால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளும் எங்களது சமூகத்தில் உள்ள: உங்களது ஜமாஅத்தில் இணையாத பெண்களைத் திருமணம் செய்வதை நீங்கள் தடுக்கின்றீர்கள்? வேதம் கொடுக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்யலாம் என நீங்கள் கூறினால் இவர்களுக்கும் அல்குர்ஆன் எனும் வேதம் கொடுக்கப்பட்டுள்ளதே.............?
பதில் :
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-
இன்றைய தினம் நல்லவைகள் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களது உணவு அவர்களுக்கும் ஆகுமானதே! விசுவாசிகளில் கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் பெண்களில் கற்புடைய பெண்களையும் விபச்சாரகர்களாகவோ, வைப்பாட்டிகளாக எடுத்துக் கொள்வோராகவோ அல்லாமல் திருமணம் முடிப்போராக அவர்க ளுக்குரிய மஹர்களை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் (அது ஆகுமானதே.) ................
( 0 5 : 0 5 )
வேதம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ள கற்புடைய பெண்கள் எனக் கூறும்போது அல்லாஹ் ஷஷஉங்களுக்கு முன்னர் என்பதையும் சேர்த்துக் கூறியுள்ளான். எமக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட வர்கள் எனக் கூறுவது யூதர்களையும் கிறிஸ்த்தவர்களையுமே குறிக்கும். எனவே இன்றைய நிலையில் ஒரு முஸ்லிம் திருமணம் செய்வதானால் மணமகள் பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்ற கற்புடைய ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். அல்லது யூத, கிறிஸ்தவர்களில் உள்ள கற்புடைய பெண்ணாக இருக்க வேண்டும். ஏனையோரைத் திருமணம்செய்வது முஸ்லிம்களுக்கு ஆகுமானதல்ல.