கேள்வி : 4 5
ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாத காலங்களில் இஸ்லாத்தின் பெயரால் காணப்படும் அத்தனை பிரிவுகளையும் விட்டு விலகிவிட்டால் அவர் அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கணிக்கப்படுவார் என நீங்கள் கூறுகின்றீர்கள். பிரிவுகளை விட்டும் ஒதுங்குபவர் அச்சந்தர்ப்பத்தி லேயே முஸ்லிமாக மாறிவிடுகிறார் என்றால் மீண்டும் அவர் எதற்காக இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டும்? ஏற்கனவே அவர் முஸ்லிமாகத்தானே இருக்கின்றார். அவர் அமீருக்குக் கட்டுப்படு வதற்குரிய பைஅத்தை மாத்திரம் செய்வது போதுமானதல்லவா....?
கேள்வி : 4 6
பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பைஅத் செய்யாத மனைவியருடன் வாழ்க்கை நடாத்துகின்றார்கள். இவ்வாறு அவர்களுடன் வாழ்வதற்கு இஸ்லாத்திலே அனுமதியுள்ளதா....?
கேள்வி : 4 7
மறுக்கின்றவனைத் தவிர எனது உம்மத்தில் அத்தனை பேரும் சுவனம் செல்வார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நீங்களோ ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது உம்மத் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரியும் எனக் கூறுவதுடன் அதில் எழுபத்தியிரண்டு நரகம் செல்லும் என்பதாகக் கூறுகின்றீர்கள். உங்களது இந்தக் கூற்று முழு உம்மத்தும் சுவனம் செல்லும் எனக் கூறும் ஹதீஸிற்கு முரணாக அமைவதனால் உங்களது கூற்று தவறு என்றாகின்றது. உங்களது கூற்றுத்தான் சரியானதாக இருந்தால் அதற்கான உங்களது ஆதாரங்கள் என்ன........?
கேள்வி : 4 5
ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாத காலங்களில் இஸ்லாத்தின் பெயரால் காணப்படும் அத்தனை பிரிவுகளையும் விட்டு விலகிவிட்டால் அவர் அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கணிக்கப்படுவார் என நீங்கள் கூறுகின்றீர்கள். பிரிவுகளை விட்டும் ஒதுங்குபவர் அச்சந்தர்ப்பத்தி லேயே முஸ்லிமாக மாறிவிடுகிறார் என்றால் மீண்டும் அவர் எதற்காக இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டும்? ஏற்கனவே அவர் முஸ்லிமாகத்தானே இருக்கின்றார். அவர் அமீருக்குக் கட்டுப்படு வதற்குரிய பைஅத்தை மாத்திரம் செய்வது போதுமானதல்லவா....?
பதில் :
ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாத நிலையில் பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்பதற்குரிய கூட்டமைப்பும், அதற்கான தலைமைத் துவமும் இல்லாத காரணத்தினால் வெறுமனே இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்று ஒதுங்குபவர்களுக்கு அல்லாஹ் முஸ்லிம் எனும் அந்தஸ்த்தை வழங்குகின்றான். பைஅத் செய்வதற்குரிய தலைமைத்துவமும், கூட்டமைப்பும் இல்லாததன் காரணமாக வழங்கப்பட்ட இந்தச் சலுகையை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்திப்பார்ப்பது மிகப் பெரும் தவறாகும். இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலிருந்து பல உதாரணங்களை முன்வைக்கலாம்.
பன்றியிறைச்சியையும், இறந்த மிருகங்களின் மாமிசத்தையும் சாப்பிடுவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆகுமாக்கப்பட்ட உணவுகள் எதுவும் கிடைக்காத நிலையில் மிகமிக வன்மையாகத் தடைசெய்யப்பட்டுள்ள இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கு அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளான்.
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:- இறந்த (மிருகங்களை)யும், இரத்தத்தையும், பன்றியின் மாமிசத்தையும், அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் (பெயர்) கூறி (அறுக்க)ப்பட்டவைகளையுமே (அல்லாஹ்) உங்கள்மீது ஹராமாக ஆக்கியுள்ளான். ஆகவே யார் (அவற்றைச் சாப்பிடும்) நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றாரோ (அவர்) பாவம் செய்யும் நோக்கம் இல்லாத வராகவும், (தேவையான அளவைத்) தாண்டாதவராகவும் இருந்தால் அவர்மீது எவ்விதக் குற்றமும் கிடையாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிக்கக் கூடியவனாகவும், அளவற்ற அன்புடைய வனாகவும் இருக்கின்றான்.
( 0 2 : 1 7 3 )
தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பன்றியிறைச்சியைச் சாப்பிடுவதற்கு அனுமதி உள்ளது என்பதனை ஆதாரமாகக் காட்டி சாதாரண நிலையிலும் அதனைச் சாப்பிடுவதில் குற்றமில்லை என எவராவது வாதித்தால் அதனை நீங்கள் சரிகாண்பீர்களா........?
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
உங்களுக்கு முன்னிருந்தவர்களில் தொன்னூற்றி ஒன்பது கொலைகள் செய்த ஒரு மனிதர் இருந்தார். பின்னர் (திருந்தி வாழ நினைத்த அவர்) பூமியில் உள்ளவர்களில் மிகவும் அறிவுடையவர் யார் என (மக்களிடம்) கேட்டார். அதற்கு ஒரு துறவியை சுட்டிக் காட்டப்பட்டது. உடனே அவரிடம் வந்து “நிச்சயமாக அவர் தொன்னூற்றி ஒன்பது கொலைகள் செய்துள்ளார். அவருக்குப் பாவமன்னிப்பு உள்ளதா?” எனக் கேட்டார். அப்போது (அவர்) “இல்லை” எனக் கூறினார். உடனே அவரையும் கொன்றுவிட்டார். பின்னர் (மீண்டும்) பூமியில் உள்ளவர்களில் மிகவும் அறிவுடையவர் யார் என (மக்க ளிடம்) கேட்டார். அப்போது அறிவாளியான ஒரு மனிதர் சுட்டிக் காட்டப்பட்டார். (அவரிடம் வந்து) “நிச்சயமாக அவர் தொன்னூற்றி ஒன்பது கொலைகள் செய்துள்ளார். அவருக்குப் பாவமன்னிப்பு உள்ளதா?” எனக் கேட்டார். அப்போது (அவர்) “ஆம்! (பாவியான) அவருக்கும் பாமன்னிப்பிற்கும் இடையில் குறுக்கிடுவது யார்? இவ்வாறு இவ்வாறான இடத்திற்குச் செல்வீராக! நிச்சயமாக அதிலே சில மனிதர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து (வாழ்ந்து) கொண்டிருக்கின்றார்கள். எனவே (நீரும்) அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை அடிபணிந்து (வாழ்வீராக!) உமது பூமிக்கு (ஒருபோதும் நீர்) திரும்ப வேண்டாம். ஏனெனில் அது கெட்ட பூமியாகும்.” எனக் கூறினார். உடனே (அவர்) நடக்க (ஆரம்பித்தார்) அரைவாசித்தாரம் வந்ததும் அவருக்கு மரணம் வந்தது. எனவே அவருடைய (விடயத்தில்) அருளின் வானவர்களும் தண்டனையின் வானவர்களும் வாக்குவாதப்பட்டார்கள். “(அவர்) பாவமன்னிப்புத் தேடியவராக, தனது உள்ளத்தால் அல்லாஹ்வை நோக்கியவராக வந்துள்ளார்.” என அருளின் வானவர்கள் கூறினார்கள். தண்டனையின் வானவர்களோ “நிச்சயமாக அவர் எந்தவித நன்மையும் அறவே செய்யவில்லை” எனக் கூறினார்கள். அப்போது அவரிடம் ஒரு வானவர் மனித உருவத்தில் வந்தார். எனவே அவரைத் தங்களுக்கு மத்தியில் (தீர்ப்பாளராக) ஆக்கிக்கொண்டார்கள். உடனே அவர் “இரண்டு பூமியையும் அளவிடுங்கள். அவ்விரண்டில் எதற்கு (அவர்) சமீபமாக இருக்கின்றாரோ (அவர்) அதற்குச் சொந்தமானவர்” எனக் கூறினார். (அவர்கள்) அதனை அளந்து (பார்த்தனர். அவர்) நாடிச்சென்ற (பூமிக்கு) அவர் நெருக்கமாக இருக்கக் கண்டனர். எனவே அருளின் வானவர்கள் அவரைக் கைப்பற்றினர்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி. தவ்பா 08)
கலிமா, பைஅத், நல்லமல் என எதுவும் இல்லாத மனிதரை அல்லாஹ் மன்னித்து அருளிற்குரிய வானவர்களின் கையில் ஒப்படைத்துவிட்டான் என இந்த ஹதீஸ் கூறுகின்றது. சத்தியத்தை ஏற்றுக்கொள்ளச்சென்ற மனிதருக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக் காதபோது அவரது தூய எண்ணத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்ட முயற்சிக்கு அல்லாஹ் கூலி வழங்கியுள்ளான் என்பதை ஆதாரமாக வைத்து கலிமா, பைஅத், தொழுகை என எதுவும் இல்லாமலும் விரும்புகின்றவர்கள் சுவனம் சென்றுவிடலாம் என எவராவது வாதித்தால் அதனை நீங்கள் ஏற்கத் தயாரா......? ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு முன்னர் தூதராக ஈஸா (அலை) அனுப்பப்பட்டார்கள். அதன் பின்னரான அறுநூறு வருடங்களில் ஈஸா (அலை) அவர்களைப் பின்பற்றி ஒரு கூட்டமாக வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். இவ்வாறு ஈஸா ர அவர்களை ஏற்று முஸ்லிம்களாக இருந்தவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) நபியாக அனுப்பப்படுகின்றபோதும் வாழ்ந்தார்கள். இவ்வாறு ரஸூலுல்லாஹி (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முதல்நாள் முஸ்லிம்களாக இருந்தவர்கள்: அவர்கள் முன்னர் ஏற்றுக்கொண்டிருந்த இஸ்லாத்தில் எவ்விதக் குறைபாடும் செய்யாமல் அடுத்த நாள் முதல் அவர்கள் தொடர்ந்தும் முஸ்லிம்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டும்.“ஏற்கனவே நாம் இஸ்லாத்தில் இருந்ததனால் நாம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது” என அவர்கள் கூற முடியாது. அவ்வாறு கூறி பைஅத் செய்ய எவராவது மறுப்பார்களானால் அவர்கள் முஸ்லிம்களாகவே இருக்க மாட்டார்கள்.
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
எனது உம்மத்தில் உள்ள எந்தவொரு யூதராவது அல்லது கிறிஸ்த்தவராவது என்னைப்பற்றிக் கேள்விப்பட்ட பின்னரும் என்னை விசுவாசம் கொள்ளவில்லையாயின் (அவன்) நரகம் நுழைவான்.
(முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ், அறி: அபூ மூஸா வ )
யூதர்கள் என்பவர்கள் நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தின ராவார்கள். எழுபத்தியொரு பிரிவாகப் பிரிந்த அவர்களில் ஒரு கூட்டத்தினர் மாத்திரமே நேர்வழியில் இருந்தார்கள். கிறிஸ்த்தவர்கள் என்பவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களின் சமூகத்தினராவார்கள். இவர்கள் எழுபத்தியிரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள். இவர்களில் ஒரேயொரு கூட்டத்தினர் மாத்திரமே நேர்வழியில் இருந்தார்கள். இந்த இரண்டு சமூகத்தினரும் பனூ இஸ்ராயீல் கோத்திரத்தைச் சேர்ந்த இரண்டு நபிமார்களின் சமூகத்தினராவார்கள். இவர்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படும். ரஸூலுல்லாஹி (ஸல்) நபியாக அனுப்பப்பட்டதன் பின்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களைப் பின்பற்ற வேண்டிய காலம் முடிவடைகின்றது. ஏனெனில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தனித்தனி கோத்திரங்களுக்காக அல்லாமல் முழு மனித சமுதாயத்திற்குமே நபியாக அனுப்பப் பட்டவர்களாவார்கள். எனவே வேதம் கொடுக்கப்பட்டவர்கள் ஏற்கனவே விசவாசியாக இருந்தாலும்கூட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் வருகையுடன் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் மீண்டும் பைஅத் செய்து தங்களது இஸ்லாத்தை உண்மைப்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யாதவர்கள் ஏற்கனவே விசுவாசிகளாக இருந்திருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள்.
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
மூன்று (வகையினர்): அவர்களுக்கான கூலியை இரண்டு விடுத்தம் கொடுக்கப் பெறுவார்கள். ஒரு மனிதர்: அவருக்கு ஒரு அடிமை இருக்கின்றாள். எனவே அவளுக்கு (அறிவைக்) கற்றுக் கொடுத்து, அவளுக்குக் கற்பிப்பதை அழகாகவும் செய்கின்றார். அத்துடன் அவளுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கின்றார்: அவளது ஒழுக்கத்தைச் சிறப்பாக்குகின்றார். பின்னர் அவளை விடுதலை செய்து, அவளைத் திருமணம் செய்துகொள்கின்றார். அவருக்கு இரண்டு கூலிகள் (கிடைக்கும். இரண்டாவது வகையினர்) வேதம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ள விசுவாசியாவார். அவர் (முன்னரும்) விசுவாசியாக இருந்து, பின்னர் நபி (ஸல்) அவர்களைக் கொண்டு விசுவாசம் கொண்டவராவார். எனவே அவருக்கும் இரண்டு கூலிகள் (கிடைக்கும்.) அல்லாஹ்வுக்கு செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்தி, தனது எஜமானுக்கு விசுவாசமாகவும் நடக்கும் அடிமை (மூன்றாவது வகையினராவார்.)
(ஸஹீஹுல் புஹாரி கி. ஜிஹாத் 1 4 3)
ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாதபோது பிரிவுகளை விட்டும் ஒதுங்கி, தனித்து வாழ்பவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் தோன்றியதும் அவர்களிடம் பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்பது கடமை என்பது இப்போது புரிகின்றதல்லவா...............?
கேள்வி : 4 6
பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பைஅத் செய்யாத மனைவியருடன் வாழ்க்கை நடாத்துகின்றார்கள். இவ்வாறு அவர்களுடன் வாழ்வதற்கு இஸ்லாத்திலே அனுமதியுள்ளதா....?
பதில் :
பருவ வயதடைந்த ஒவ்வொருவரும் அல்லாஹ் வஹிமூலம் இறக்கியருளிய இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக ஆக வேண்டும். அவ்வாறு பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் முஸ்லிம்களாவார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக பைஅத் செய்யாதவர்கள் ஜாஹிலிய்யத்தில் இருக்கின்றார்கள் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும். ஜாஹிலிய்யப் பெண்களுடன் திருமண பந்தம் இருக்கக்கூடாது என்பதற்கு அல்லாஹ்வின் வேதத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
........ மேலும் நிராகரிக்கும் பெண்களுடனான திருமண பந்தத்தைத் (தொடர்ந்தும்) பிடித்துக்கொண்டிருக்காதீர்கள்........
( 6 0 : 1 0 )
மேற்படி அல்குர்ஆன் வசனத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு சிலர் நிராகரிக்கும் பெண்களுடன் திருமண பந்தத்தைத் தொடர்ந்தும் பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம் என அல்லாஹ் கூறியுள்ளதை : ஜாஹிலிய்யப் பெண்களுடனான திருமண பந்தத்தை நீடிக்கக்கூடாது என்பதாக மாற்றிக் கூறுகின்றார்கள். பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் திருமணம் முடித்தவராக இருந்து, மனைவி இஸ்லாத்தை ஏற்காவிட்டால் அவளுடன் வாழ்வது இஸ்லாத்தின் பார்வையில் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதே உண்மையாகும். பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிமான ஆண்கள் பைஅத் செயததன் பின்னர் : பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத பெண்களைத் திருமணம் செய்வது தடுக்கப்பட்ட ஒன்றாகும். பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத பெண்களில் யூதப் பெண், அல்லது கிறிஸ்தவப் பெண்ணை முடிப்பதற்கு மாத்திரம் அல்லாஹ் முஸ்லிமான ஆண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளான். இந்த அனுமதி ஆண்களுக்கு மாத்திரமேயாகும்.
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
இன்றைய தினம் நல்லவைகள் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களது உணவு அவர்களுக்கும் ஆகுமானதே! விசுவாசிகளில் கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் பெண்களில் கற்புடைய பெண்க ளையும் விபச்சாரகர்களாகவோ, வைப்பாட்டிகளாக எடுத்துக் கொள்வோராகவோ அல்லாமல் திருமணம் முடிப்போராக அவர்களுக்குரிய மஹர்களை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் (அது ஆகுமானதே.) மேலும் யார் விசுவாசத்தை நிராகரிக்கின்றானோ நிச்சயமாக அவனது (நற்)செயல் அழிந்துவிடும். மேலும் அவன் மறுமையில் நஷ்டம் அடைவோரில் நின்றும் (உள்ளவனாவான்.)
( 0 5 : 0 5 )
திருமணம் முடித்தன் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவரது மனைவி பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றவளாக இல்லாதிருந்தால் அவள் இஸ்லாத்தை நிராகரிக்கும் நிலையில் இருக்கின்றாளா? அல்லது வெறுமனே இஸ்லாத்திற்காக பைஅத் செய்யாமல் ஜாஹிலிய் யத்தில் இருக்கின்றாளா? என்பதைப் பொறுத்தே அவளுடன் வாழுவது பற்றிய சட்டம் அமையும். அவள் இஸ்லாத்தை நிராகரிக்கும் நிலையில் இருந்தால் அவளுடனான திருமண பந்தத்தை முஸ்லிமான கணவன் நீடிக்கக்கூடாது. மாறாக அவள் இஸ்லாத்திற்காக பைஅத் செய்யாமல் ஜாஹிலிய்யத்தில் இருந்தால் அத்தகைய பெண்ணுடன் முஸ்லிமான கணவன் வாழ்வதில் எவ்விதத் தவறும் கிடையாது.
கேள்வி : 4 7
மறுக்கின்றவனைத் தவிர எனது உம்மத்தில் அத்தனை பேரும் சுவனம் செல்வார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நீங்களோ ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது உம்மத் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரியும் எனக் கூறுவதுடன் அதில் எழுபத்தியிரண்டு நரகம் செல்லும் என்பதாகக் கூறுகின்றீர்கள். உங்களது இந்தக் கூற்று முழு உம்மத்தும் சுவனம் செல்லும் எனக் கூறும் ஹதீஸிற்கு முரணாக அமைவதனால் உங்களது கூற்று தவறு என்றாகின்றது. உங்களது கூற்றுத்தான் சரியானதாக இருந்தால் அதற்கான உங்களது ஆதாரங்கள் என்ன........?
பதில் :
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைப் பின்பற்றுகின்ற உம்மத் முழுமையாக சுவனம் செல்லும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஏனெனில் அது வஹி மூலம் அறிவிக்கப்பட்ட உண்மையாகும்.
அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்:-
“எனது சமூகத்தில் மறுக்கின்றவனைத் தவிர (மற்ற) அனைவரும் சுவனம் நுழைவர்.” என ரஸூலுழ்ழாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) “அழ்ழாஹ்வின் தூதரவர்களே! யார்தான் (வெளிப்படையாக) மறுப்பார்கள்?” என (அங்கிருந்தவர்கள்) கேட்டார்கள். (அதற்கு) “யார் எனக்குக் கட்டுப்படுகின்றாரோ (அவர்) சுவனம் நுழைவார். அத்துடன் யார் எனக்கு மாறு செய்கின்றாரோ (அவர்) நிச்சயமாக மறுத்துவிட்டார்.” எனக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி. இஃதிஸாம் 03)
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது உம்மத்தில் மறுப்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள் என அவர்களே கூறிவிட்டார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது உம்மத் எனக் கூறிக்கொண்டே அவர்களது வழிகாட்டலை நாவினால் மறுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது பொதுவாக யாவரும் அறிந்ததே. எனவேதான் நபித்தோழர்கள் “அழ்ழாஹ்வின் தூதரவர்களே! யார்தான் (வெளிப் படையாக) மறுப்பார்கள்?” எனக் கேட்டார்கள். அப்போது ரஸூலுல்லாஹி(ஸல்) அவர்கள் கூறிய பதில் பொதுவாக மக்கள் நினைத்திருப்பதற்கு மாற்றமாக இருந்தது. நபியவர்களின் உம்மத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்டு மறுப்பவர்கள் நாவினால் மறுக்க மாட்டார்கள். தங்களது நடத்தையினால் மறுப்பார்கள் என்பதை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக்கொண்டே அவர்களுக்கு மாறுசெய்பவர்களைக் கண்கூடாகப் பார்ப்பதென்றால் மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் போன்ற வற்றைப் பிப்பற்றுபவர்கள் நல்ல உதாரணமாக இருக்கின்றார்கள். இவர்கள் மத்ஹபுகளின் பெயரால், ஷெஹ்மார்களின் பெயரால், இயக்க அறிஞர்களின் பெயரால் நேரடியாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்கிறார்கள். அதற்கான உதாரணங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் ஒன்றை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றோம்.
தயம்மும் செய்வது எப்படி என்பதை அறியாதிருந்த அம்மார் (ரலி) அவர்களைப் பார்த்து “இவ்வாறு செய்வதே உமக்குப் போது மானதாகும்” எனக்கூறிய ரஸூலுழ்ழாஹி (ஸல்) தங்களது இரு கைகளையும் பூமியில் அடித்து அவ்விரண்டையும் ஊதிவிட்டார்கள். பின்னர் தங்களது முகத்தையும், மணிக்கட்டு வரையில் இரு கைகளையும் தடவிக் கொண்டார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஹைழ் 2 8 )
ஷhபீஈ மத்ஹபில் கற்றுக் கொடுக்கப்படும் தயம்மும் எவ்வாறு என்பதை அந்த மத்ஹபின் முன்னோடிகளில் ஒருவரான இமாம் நவவி அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்கள்:-
தயம்மும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். எங்களது மத்ஹபும், அதிகமா னவர்களினது மத்ஹபும் இரண்டு விடுத்தம் அடிப்பது கட்டாயம் என்பதாகும். முகத்திற்கு ஒருமுறை தரையில் அடிக்க வேண்டும், இரு கைகளையும் முழங்கை வரை தடவுவ தற்காக ஒரு முறை தரையில் அடிக்க வேண்டும்.
(ஷரஹ் முஸ்லிம் கி. ஹைழ் 2 8)
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் உம்மத் எனக் கூறிக்கொண்டு இவ்வாறு தெட்டத் தெளிவாக மறுப்பவர்கள் எவ்வாறு சுவனம் செல்வார்கள்..........? இத்தகையவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள் என்பதைத்தான் ரஸூலுல்லாஹி (ஸல்) மேலேயுள்ள ஹதீஸில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
இப்பேர்து இந்த உம்மத் எழுபத்திமூன்று கூட்டங்களாக பிரிவது சம்பந்தமாக ரஸூலுல்லாஹி (ஸல்) என்ன கூறியுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்.
“ஒரு செருப்பு (மற்ற) செருப்புடன் (சரி சமனாக இருப்பது) போன்று பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்டது நிச்சயமாக எனது உம்மத்திற்கும் ஏற்படும். அவர்களில் எவரேனும் தனது தாயுடன் பகிரங்கமாக உடலுறவு கொண்டிருந்தால் எனது உம்மத்திலும் அதனைச் செய்பவர் தோன்றுவார். நிச்சயமாக பனுர் இஸ்ரவேலர்கள் எழுபத்தியிரண்டு பிரிவினராகப் பிரிந்தார்கள். எனது உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிரியும். ஒரேயொரு கூட்டத்தினரைத் தவிர அனைவரும் நரகிலே நுழைவார்கள்.” என ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள். (அப்போது நபித் தோழர்கள்) “அவர்கள் யார்?” எனக் கேட்டார்கள். “நானும் எனது தோழர்களும் எதன்மீது இருக்கின் றோமோ (அதிலே இருப்பவர்கள்)” எனக் கூறினார்கள்.
(அபூதாவூத், இ. மாஜா, திர்மிதி கி. ஈமான் 19 - ஹஸன்)
இப்போது நீங்கள் உங்களது மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். பனூ இஸ்ரவேலர்களைவிட அதிகமாக இந்த உம்மத் பிரியும் என நாங்கள் சொல்கின்றோமா? அல்லது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்த உண்மையை அவனது தூதர் கூறினார்களா..?
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த கொள்கையைப் பின்பற்றும் ஒரேயொரு கூட்டத்தைத் தவிர அனைவரும் நரகம் செல்வர் என நாம் கூறுகின்றோமா? அல்லது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரஸூலுல்லாஹி (ஸல்) சொல்லிச் சென்றார்களா.......?
இந்த உம்மத் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரிந்து, அதில் எழுபத்தியிரண்டு நரகம் செல்லும் என்பதாகக் கூறுகின்ற ஹதீஸ் “எனது சமூகத்தில் மறுக்கின்றவனைத் தவிர (மற்ற) அனைவரும் சுவனம் நுழைவர்.” எனும் ஹதீஸிற்கு முரண்படுவதாக எவராவது கருதினால் அதில் எந்த உண்மையும் இல்லை.
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது உம்மத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்டு, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கே மாறு செய்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களே கூறிவிட்டார்கள். சுவனம் செல்லும் ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தவிர எமது சமூகத்தில் உள்ள எந்தப் பிரிவை நீங்கள் எடுத்துப் பார்த்தாலும் அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வதன் மூலம் மறுப்பவர்களாக இருக்கின் றார்கள் எனும் உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். மறுக்கின்றவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள் என்பதைத்தான் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள ஹதீஸ் கூறுகின்றது. அதே விடயத்தை உண்மைப்படுத்துவதாகவே எழுபத்தியிரண்டு பிரிவினர் நரகம் செல்வார்கள் என்பதாகக் கூறும் ஹதீஸும் அமைந்துள்ளது. எனவே இந்த இரண்டு ஹதீஸ்களும் முரண்படுகின்றன என்று எவ்வாறு கூற முடியும்..............? உம்மத் அனைவரும் சுவனம் செல்வார்கள் எனும் ஹதீஸில் சுவனம் செல்பவர்களின் அளவு கூறப்படவில்லை என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் மேலோட்டமாகப் பார்க்கும் உம்மத்தில் அதிகமானவர்கள் சுவனம் செல்வார்கள் என்பதாக மக்கள் அந்த ஹதீஸைத் தவறாகப் புரிந்து கொள்கின்றார்கள். மறுப்பவர்கள் எந்த அளவில் இருந்தாலும் அவர்களுக்கு சுவனம் செல்லும் பாக்கியம் கிடைக்காது என்பதனையே அந்த ஹதீஸ் கூறுகின்றது.
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது உம்மத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்டு, தெரிந்துகொண்டே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்பவர்கள் மிகப்பெரிய அளவில் இருப்பார்கள் எனும் உண்மையை எழுபத்தியிரண்டு கூட்டம் நரகம் செல்லும் எனக் கூறுகின்ற ஹதீஸ் எமக்கு நிரூபிக்கின்றது. எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரியும் இந்த உம்மத்தில் எழுபத்தியிரண்டு பிரிவுகள் நரகம் செல்கின்றன என்பதே இதற்குப் போதுமான ஆதாரமாகும். நடைமுறையில் நாங்கள் பார்த்தால்கூட எமது சமூகத்தில் உள்ள பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்த அளவு அதிகமானவர்கள் நரகம் செல்வதற்குரிய நியாயமான காரணம் அவர்கள் தெரிந்துகொண்டே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்கின்றார்கள் என்பதாகும். இதற்குரிய தெளிவானதொரு உதாரணமாக ஷhபிஈ மத்ஹபின் தயம்மும் பற்றிய சட்டத்தை முன்னால் சுட்டிக்காட்டியுள்ளோம். இவ்வாறு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது சட்டத்தைத் தெரிந்ததன் பின்னரும் நரகம் செல்லும் பிரிவினர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட மத்ஹபுகள், இயக்கங்கள், தரீக்காக்களைக் காரணம் காட்டி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார்கள்.
சுவனம் செல்லும் ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் மாத்திரம் முழுமையாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்கின்றது. மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் என எந்த ஒன்றையும் காரணம் காட்டி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்யும் வழிகெட்ட தன்மை ஜமாஅதுல் முஸ்லிமீனில் அறவே கிடையாது. எனவேதான் ஜமாஅதுல் முஸ்லிமீன் மாத்திரம் சுவனம் செல்வதற்குத் தகுதி பெறுகின்றது.